Published:Updated:

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் பலி!

விகடன் விமர்சனக்குழு
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் பலி!
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் பலி!
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் பலி!

ஸ்ரீநகர்: இந்திய எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இந்திய வீரர் பலியாகியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டில் பலமுறை இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

##~~##
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகாட் பகுதியில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை திடீரென மீண்டும் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், பீகாரை சேர்ந்த லான்ஸ் நாயக் கான் என்ற வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.