Published:Updated:

சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியே ஜெயலலிதா சிந்திக்கிறார்: ஸ்டாலின்

சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியே ஜெயலலிதா சிந்திக்கிறார்: ஸ்டாலின்
சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியே ஜெயலலிதா சிந்திக்கிறார்: ஸ்டாலின்
சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியே ஜெயலலிதா சிந்திக்கிறார்: ஸ்டாலின்

திருவண்ணாமலை: தமிழக மக்களைப் பற்றிச் சிந்திக்காமல், பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியே ஜெயலலிதா சிந்தித்து வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழா மற்றும் நிதி அளிப்பு கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ.7 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 777 வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பிற மாவட்டங்களில் வழங்கப்பட்ட தேர்தல் நிதிகளைவிட இதுதான் அதிகப்படியான நிதி.

தி.மு.க. ஆட்சியின் போது ரூ.100 கோடியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, ரூ.36 கோடியில் திருவண்ணாமலை நகராட்சிக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் (சிப்காட்), செங்கம் அருகே பால் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

##~~##
18 ஆண்டுகளாக நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயலலிதா, வழக்கை விசாரிக்கும் நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் மாற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது வியப்பாக உள்ளது.

தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகள் பற்றி சிந்திக்காமல், பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியே ஜெயலலிதா சிந்தித்து வருகிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.