Published:Updated:

தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை: ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை: ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை: ஜி.கே.வாசன்

சென்னை: தமிழக மீனவர்கள், குஜராத் மீனவர்கள் என்று மத்திய அரசு யாரையும் பாகுபாடு பார்க்க வில்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அத்துமீறி தூத்துக்குடி கடல் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க கப்பல் பற்றிய மர்மம் நீடிக்கிறது. இது பற்றி தொடர்ந்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாராணைக்கு பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துகொள்கிறேன். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

##~~##
மேலும் தமிழக மீனவர்கள், குஜராத் மீனவர்கள் என்று மத்திய அரசு யாரையும் பாகுபாடு பார்க்க வில்லை" என்றார்.