Published:Updated:

வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த பா.ஜ.க. அமைச்சர்!

விகடன் விமர்சனக்குழு
வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த பா.ஜ.க. அமைச்சர்!
வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த பா.ஜ.க. அமைச்சர்!
வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த பா.ஜ.க. அமைச்சர்!

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் ஒருவரே வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் பட்டுவாடா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்து விட்டன.

இங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மோவ் தொகுதியில் ஆளும் பா.ஜ.க. அமைச்சர் கைலாஸ் விஜய்வர்ஜியா, பொதுமக்களுக்கு பகிரங்கமாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். இதனை தேர்தல் அதிகாரிகள் வீடியோ எடுத்தனர்.

##~~##
இதனால், தேர்தல் விதிமுறையை மீறி செயல்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டை அமைச்சர் கைலாஸ் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நவராத்திரி விழாவின்போது மேளம் அடித்தவர்களுக்கு பணம் கொடுத்தேன். நவராத்திரி விழாவில் இப்படி பணம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்" என்றார்.