Published:Updated:

பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் 2ஜி வழக்கில் சோனியா-சிதம்பரம் பெயர் சேர்க்கப்படும்: சுப்பிரமணியசாமி

விகடன் விமர்சனக்குழு

கோவை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தவுடன் 2ஜி வழக்கில் சோனியா மற்றும் சிதம்பரம் பெயர் சேர்க்கப்படும் என சுப்பிரமணியசாமி கூறினார்.

கோவை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க பிரமுகர் அசோக்கை சந்திப்பதற்காக இன்று காலை, சுப்பிரமணியசாமி கோவை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் அமெரிக்க கப்பல் சுற்றி திரிந்தது குறித்து மத்திய அரசு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

##~~##
ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், வரும் தேர்தலில் பா.ஜ.க.வினர் எந்த வேலையும் செய்யாமல் ஜெயித்து விடுவோம். நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில், ராமர் சேதுவை உடைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்களுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது. பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் 2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் சோனியா காந்தி ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படும்'' என்றார்.
ச.ஜெ.ரவி