Published:Updated:

மோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்: எல்.கே. அத்வானி

மோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்: எல்.கே. அத்வானி
மோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்: எல்.கே. அத்வானி
மோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்: எல்.கே. அத்வானி

அகமதாபாத்: குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர் ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மோடிக்கு வழக்கத்திற்கு மாறான தகுதி உள்ளதாகவும், அவர் எப்பொழுதுமே எதையாவது புதுமையாக சிந்திப்பவர் என்றும், குஜராத்தில் உள்ள நமது (பா.ஜனதா) அரசு குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும், மோடி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகழை சம்பாதித்துள்ளார் என்றும் மேலும் கூறினார்.  

முன்னதாக குஜராத் மாநிலத்தில் அரசு சார்பில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  குஜராத் வந்த அத்வானி, மோடியை இன்று காலை தனியாக சந்தித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து, அகமதாபாத் மாநகாரட்சி கட்டட திறப்பு விழா, மற்றும் சபர்பதி ஆறு மேம்பாட்டு திட்ட துவக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோடியும், அத்வானியும் ஒரே காரில் வந்து கலந்து கொண்டனர். குஜராத் மாநிலத்தின், காந்திநகர் மக்களவை எம்.பி. என்ற முறையில் அத்வானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

##~~##
மோடியை பா.ஜனதா தேர்தல் பிரசாரக் குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்ததற்கு அத்வானி ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.