எதிராளி பலமாக இல்லாததால் புதுக்கோட்டை இடைத்தேர்தல் களை கட்டவே இல்லை!

தமிழக அமைச்சர் பெருமக்கள் ஆளுக்கு ஓர் ஏரியா என்று பிரித்துக்கொண்டு ஓட்டு வேட்டையாடி வந்தாலும் தி.மு.க-வின் புறக்கணிப்பால் சுரத்தே இல்லாமல் கிடந்தது புதுக்கோட்டை இடைத்தேர்தல் களம்.

இப்போது தே.மு.தி.க-வின் தீவிரப் பிரசாரத்தால்தான் கொஞ்சம் பரபரப்பு. கறம்பக்குடியில் பிரேமலதாவுக்கு ஆரத்தி காட்டுவதற்காக ஏராளமான பெண்கள் காத்திருந்தனர். அவர்கள் ஆரத்தி எடுத்ததும், ''இதுக்குக் காசு கொடுப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால் இதைக் காரணம் காட்டி, நமது கட்சி மீது வழக்குப் போடுவார்கள். நமது வேட்பாளர் ஜெயித்ததும் கேப்டன் உங்கள் பை நிறையக் காசு தருவார்'' என்று சொல்லி ஆரத்தி எடுத்தவர்கள் எதிர்பார்ப்பை 'புஸ்’ ஆக்கினார். திருச்சியில் தங்கி இருக்கும் பிரேமலதா, தினமும் மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வந்துவிடுகிறார். இரவு 9 மணி வரை பிரசாரம் செய்துவிட்டு மீண்டும் திருச்சிக்குத் திரும்புகிறார். இவரது சகோதரர் சுதீஷ் புதுக்கோட்டையிலேயே முகாமிட்டு, கட்சிக்காரர்களை விரட்டி, விரட்டி வேலை வாங்கி வருகிறார்.

பிரேமலதாவின் பிரசாரத்துக்குப் பதிலடி கொடுப்பதுபோல, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் களம் இறக்கப்பட்டார். பிரேமலதா பிரசாரம் தொடங்கிய நேரத்தில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தனது பிரசாரத்தை ஆரம்பித்தார் சரத். முதல் நாள் பிரசாரத்தில், ''திராணி இருப்பவர் என சொல்லும் விஜயகாந்த், மக்களின் பிரச்னைகளை சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்ல வரவேண்டும். அ.தி.மு.க. கூட்டணியால் 29 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று இருக்கும் விஜயகாந்த் கூட்டணி தர்மத்தை மீறிவிட்டார்'' என்று சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளினார். ஆனால் என்ன நடந்ததோ, அடுத்த நாள் பிரசாரத்தில் ''விஜயகாந்த்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை'' என்று ஜகா வாங்கிக்கொண்டார்.

கடந்த 6-ம் தேதி மாங்கோட்டை பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த், ''நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று தம்பட்டம் அடிக்கும் ஆளும் கட்சி, இடைத்தேர்தலில் பணியாற்ற ஏன் இத்தனை அமைச்சர்களை வரவழைக்க வேண்டும். அ.தி.மு.க. பிரேக் இல்லாத ஆட்சியாகி விட்டது. ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு மருந்து கொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

விஜயகாந்த்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணனும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர், ''தார்மீக அடிப் படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வேண்டிய தொகுதியில் அ.தி.மு.க. தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஆளும் கட்சியின் அதிகாரத்தையும் அராஜகத்தையும் எதிர்த்து நின்று கடிவாளம் போட தே.மு.தி.க-வுக்கு வாய்ப்பு கொடுங்கள்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

அது சரி, தொகுதிக்குள் முகாமிட்டு இருக்கும் அமைச்சர்கள் என்னதான் செய்கிறார்கள்?

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் போன்ற சீனியர் அமைச்சர்கள் நிர்வா கிகளிடம் வேலை வாங்குவது, வரவு செலவுகளைக் கவனிப்பது என்று பிஸியாக இருக்கிறார்கள்.

அமைச்சர் விஜய், வட்டாப்பட்டி கிராமத்துக்குத் தினமும் காலையில் ஆஜராகி, ஒவ்வொரு வீட்டினரிடமும் நலம் விசாரிக்கிறார். 'உங்கள் கோரிக்கையை எல்லாம் அம்மா உடனே சரிசெய்து தருவார். நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று வாக்குறுதி கொடுக் கிறார்.

மூக்கம்பட்டியில் முகாமிட்டிருக்கும் அமைச்சர் சிவபதி, ''ஸ்கூல் திறந்தாச்சே... எல்லாரும் ஸ்கூலுக்குப் போறீங்களா?'' என்று குழந்தைகளிடம் கேட்டபடி பெரியவர்களை மடக்குகிறார். ''உங்க குழந்தைகளோட படிப்புச் செலவு முதல் கல்யாணச் செலவு வரை அம்மாவே ஏத்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட அம்மாவுக்கு மறக்காம உங்க ஆதரவைத் தரணும்'' என்று 'பஞ்ச்’ வைக்கிறார்.

மழையூரில் இருக்கும் அமைச்சர் காமராஜ், தினமும் வயல்வெளிக்குச் சென்றுவிடுகிறார். அங்கு வேலை செய்பவர்களின் சாப்பாட்டை வாங்கி ருசிக்கிறார். ''இது ரேசன் அரிசி சாப்பாடு'' என்று பெண்கள் சொல்ல, ''அப்படின்னா அம்மா கொடுத்த அரிசின்னு சொல்லுங்க. அரிசி கொடுத்த அம்மாவை மறக்கலாமா?'' என டைமிங் சென்டிமென்ட் போட்டுத் தாக்குகிறார்.

களபம் பகுதியில் இருக்கும் அமைச்சர் வைத்தி லிங்கம் அனைத்து வீடுகளுக்கும் சென்று, ''உங்கள் வீடுகளுக்கு அம்மா கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் வந்துருச்சா?'' என இலவசப் பொருட்களை நினைவுபடுத்தி ஓட்டு வேட்டை நடத்துகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த வீட்டுக்குச் சென்றாலும் பெண்களை அழைத்து ''உங்கள் கணவர் என்ன சம்பாதிக்கிறார்? எவ்வளவு மிச்சம் பிடிக்கிறீர்கள்?'' என்று கேட்பதோடு, ''உங்கள் கணவருக்கு குடிப் பழக்கம் இருக்கிறதா?'' என்று விசாரிக்கிறார். 'ஆமாம்’ என சொல்லும் வீட்டில், மதுவால் ஏற்படும் தீமையைப் பற்றி ஆண்களுக்கு அரை மணி நேரம் பாடம் எடுத்து, அதன் பிறகு ஓட்டு கேட்கிறார். அமைச்சர் ரமணா, ஜானகி நகரில் பொறுமையாக ஒவ்வொரு வீடாகச் சென்று ஓட்டு கேட்கிறார். அமைச்சர் ராமலிங்கம் பெரியார் நகரிலும் அமைச்சர் சின்னையா உசிலங்குளம் பகுதியிலும் பிரசாரத்தில் இருக்கிறார்கள். அதே போன்று அமைச்சர்கள் வளர்மதி, பழனியப்பன், சண்முகம், தாமோதரன், ராஜு, பச்சைமால், பழனிச்சாமி, மூர்த்தி, சம்பத், தங்கமணி, சுந்தர்ராஜன், செந்தூர்பாண்டியன், கோகுல இந்திரா, முக்கூர் சுப்ரமணியன், ஜெயபால், ராஜேந்திர பாலாஜி, செல்லப் பாண்டியன், முஹம்மத் ஜான், ஆனந்தன் ஆகியோரும் ஓய்வு இல்லாமல் சுற்றி வருகிறார்கள்.

வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு புதுக் கோட்டை எம்.பி-யான குமார் சாரதியாக வலம் வருகிறார். அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிகாலை முதல் இரவு வரை தொகுதி முழுவதும் வலம் வருகிறார்கள்.

'தி.மு.க. களம் இறங்கி இருந்தால், எங்களுக்கு ஆளும் கட்சி பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கும். இப்படிக் கெடுத்துப்புட்டாங்களே’ என்று தி.மு.க. மீது மக்கள் பலரும் கோபத்தில் இருக்கிறார்கள். 'உங்க தலைவர் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்லை’ என்றும் புதுக்கோட்டைவாசிகள் தி.மு.க. உடன்பிறப்புகளிடம் வெளிப்படையாகவே புலம்பிவந்தார்கள். 'எந்த நேரமும் பணம் கொடுக்கப் படலாம்’ என்ற நம்பிக்கையை மட்டும் அவர்கள் இழக்காமல் இருந்தார்கள். இந்த நிலையில் காமராஜர்புரம் ஏரியா விடுகளின் வாசலில், இரவோடு இரவாக வேஷ்டி, சேலைகளை யாரோ போட்டுவிட்டுப் போய் இருக்கிறார்கள். முதலில் வேஷ்டி, சேலை... அப்புறமாக பணம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை வந்தது மக்களுக்கு!

ஒரு வழியாக, மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த பண மழை கடந்த ஏழாம் தேதி முதல் பொழியத் தொடங்கிவிட்டது. அந்தந்தப் பகுதிக்குப் பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் மூலம் வார்டு நிர்வாகிகளுக்குப் போய், அவர்கள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் போய்ச் சேர்கிறதாம். கிராமப்புறங்களில் ஓட்டுக்கு 500 ரூபாயும், நகர்ப் புறங்களில் 1,000 ரூபாயும் கொடுத்து வருகிறார்கள். இதைக் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரும் வாங்குவதுதான் ஆச்சர்யம்.

கடைசி நேரத்தில் இன்னும் என்னென்ன காமெடிகள் நடக்கப்போகிறதோ?

- வீ.மாணிக்கவாசகம், பெ.தேவராஜ்

படங்கள்: கே.குணசீலன், செ.சிவபாலன்

முதல்வருக்குத் தெரியாதா அபர்ணா விவகாரம்?

கடந்த தி.மு.க. ஆட்சியில் புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் இது. 15 வயதுச் சிறுமியான அபர்ணா கடந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வுக்காக வீட்டில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஆறு வயதுத் தம்பி மட்டும் உடன் இருந்தான். அவர்களின் தந்தையார், புதுக்கோட்டையில் 2,000 மாணவர்கள் படிக்கும் பிரபல அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர். அம்மாவும் ஆசிரியை. இவர்கள் இருவரும் பணிக்குச் சென்று விட்டனர்.

பகல் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள், முதலில் அந்த சிறுவனை வேறு ஓர் அறைக்குள் போட்டுத் தாழிட்டார்கள். பிறகு, அபர்ணாவைச் சித்ரவதை செய்து கொன்று, தூக்கில் மாட்டி விட்டனர். இந்தச் சம்பவத்தை ஒரு கொள்ளை சம்பவமாக்கும் நோக்கத்தில், வீட்டு பீரோவைத் திறந்து நகையையும் அள்ளிப் போனார்கள்.

இந்த சம்பவத்துக்குப் பின்னணியாகச் சொல்லப்படும் காரணங்களில் இதுவும் ஒன்று. பள்ளியில் நடந்த தேர்வில் காப்பி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாராம் அபர்ணாவின் அப்பா. அதற்குப் பழி வாங்கத்தான் இப்படிச் செய்தார்களாம். கொலையாளிகளில் ஒருவன், அரசியல்வாதியின் மகன். இன்னொருவன், போலீஸ் அதிகாரியின் மகன். இந்த விவரங்களை பெற்றோர்கள் மனுவாகக் கொடுத்தும், தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சியிலும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை.

முதல்வரிடம் புகார் கொடுக்கப்போன அபர்ணாவின் பெற்றோரை, சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும், போலீஸ் மௌனம் சாதித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர் தங்கள் இனத்தவர் என்பதால், புதுக்கோட்டையில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்தரையர் இன மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார் கள். இந்த மனக் குமுறலை வருகிற தேர்தலில் ஆளும் கட்சி மீது காட்டுவார்கள் என்ற பீதி ஆளும்கட்சிக்காரர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதற்கிடையில், கடந்த புதன் அன்று முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களான குழ.செல்லையா, ராஜா.பரமசிவம் உள்ளிட்ட சிலரை வரவழைத்து தேர்தல் நிலவரம் பற்றி பேசி இருக்கிறார் முதல்வர். இந்த நேரத்திலும், அபர்ணா விவகாரம் முதல்வருக்குத் தெரியாதாம்.