நாம் கூர்ந்து கவனித்தபோது அவர்கள் நமக்கு ஏதோ சைகை காட்டியது தெரிந்தது. நாம் அவர்களைப் பின்தொடர ஆரம்பித்தோம். காட்டுக்குள் விறுவிறுவெனக் கடந்து சென்றார்கள் அவர்கள். அவர்களுடைய நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாகச் சென்றோம். ஒரு கட்டத்தில் திடீரென நின்றவர்கள் அப்படியே திரும்பி நம்மை நோக்கி வந்தனர். முகத்தை துணியால் மறைத்துக் கட்டி இருந்தனர். கைகளில் ஏகே 47 ரகத் துப்பாக்கிகள். விஷயம் நமக்குப் புரிய ஆரம்பித்தது.

நாம் இந்தப் பகுதியில் நடமாடி வருவதை சி.ஆர்.பி.எஃப். படையினரைப் போலவே மாவோயிஸ்ட் இயக்க உளவுப்பிரிவினரும் கண்காணித்து வந்துள்ளனர். நம்மைப் பின்தொடர்ந்து வந்து நாம் யாரென்று தெரிந்துகொண்டும் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், மாவோயிஸ்ட்களை நாம் சந்திக்க வேண்டும் என்று கிராமத்து மக்களிடம் சொன்ன தகவலும் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

இருவரும் நம்மைப் பார்த்து 'வணக்கம்' சொன்ன கையோடு, ''தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள்தானே?'' என்றனர். ''ஆமாம்'' என்றோம்.

நாம் ஒரு குடிசையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டோம். உரையாடல் மெள்ளத் தொடங்கியது.

''இங்குள்ள பிரச்னையை, உங்களுடைய கோரிக்கைகளைச் சொல்லுங்களேன்?'' என்றோம்.

''இது எங்கள் மண். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் ஊர் இல்லை. எங்கள் மண். இந்தக் காடுகளும் மலைகளும்தான் எங்களுக்கு எல்லாமும். காலையில் எழுந்ததும் காட்டுக்குள்தான் போவோம். பொழுது சாயும்போதுதான் வீடு திரும்புவோம். வீடு இருப்பதும் காட்டுக்குள்தான். ஆக, எங்களுக்கு உணவு, உழைப்பு, உறைவிடம், உலகம் எல்லாமே இந்தக் காடும் மலைகளும்தான். இதைத்தவிர வேறு ஒரு வாழ்க்கை எங்களுக்குத் தெரியாது.

எங்கள் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. எங்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. சாலைகள் வேண்டும் எனப் பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இப்படி எங்களுக்கென்று எதுவும் செய்யாத அரசாங்கம் இன்றைக்கு இந்த மண்ணைவிட்டு எங்களை வெளியேறச் சொல்கிறது. எங்கள் காடுகளையும் மலைகளையும் அழித்து சுரங்கம் தோண்டப்«பாகிறோம் என்கிறது. எங்கள் சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். எங்களைத் தீவிரவாதிகள் என்கிறது உங்கள் அரசாங்கம்'' என்றார்கள்.

''நீங்கள் தமிழ்நாடுதானே... மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பழக்கம் உண்டா?'' என்றனர்.

''பத்திரிகையாளர் என்கிற வகையில் அவரைத் தெரியும். நெருக்கமான பழக்கம் இல்லை'' என்றோம்.

''உங்கள் சிதம்பரம் நடத்தும் 'பச்சைவேட்டை’ தாக்குதலின் உக்கிரத்தால், எங்கள் மக்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்தான் விஜயகுமாரை இங்கு கொண்டுவந்தார். இது போதாது என்று எங்களை ஒழிக்க ராணுவத்தையும் அடுத்த வருடம் இறக்கிவிட இப்போதே திட்டம் போட்டு வருகிறார் சிதம்பரம்'' என்றார்கள்.

''இந்தத் தாக்குதலை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?'' என்றோம்.

''மாவோயிஸ்ட் பகுதிகளில் வேலை செய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் பலர் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா எனத் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி எங்களுக்குத் தெரியாது. எங்கள் மொழி அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அடி. நாங்கள் அழுகையாலும் ஆயுதங்களாலும் பதில் சொல்கிறோம்'' என்றார்கள்.

''இங்கே பல வருடங்களாக, அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர்களும் எங்களைச் சுரண்டுகிறார்கள். போதாக்குறைக்கு அரசாங்கம் இப்போது பெரு

நிறுவனங்களையும் அழைத்து வருகிறது. ஆரம்பத்தில் அரசாங்கம் தந்த பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தோம். பிறகுதான் சுதாரித்து, நிலம் தர மறுக்கும் இயக்கத்தைத் தொடங்கினோம். மக்களின் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத ஓர் அரசாங்கம் இருந்து என்ன பயன்? மக்கள் அனைவரும் எங்களைப் பாதுகாவலராக நினைக்கிறார்கள். கிராமங்களில் நாங்கள் முன் னின்று நடத்தும் மக்கள் நீதிமன்றங்களை வந்து பாருங்கள். நாங்கள் வேறு அல்ல; மக்கள் வேறு அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள்'' என்றவர்கள், அவர்களே தொடர்ந்தார்கள்.

''சரண்டா வனப்பகுதியில் எங்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்தச் சமயத்தில் கிராம மக்களிடம் எந்த அளவுக்குக் கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்பதை இங்கு உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடம் கேட்டுப்பாருங்கள்'' என்றவர்களிடம், ''ஆனால், இப்போது வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன அல்லவா?'' என்று கேட்டோம்.

''இங்கு ரூ. 248.48 கோடியில் அவர்களுடைய 'வளர்ச்சிப் பணி’ நடக்கிறது. ரூ. 104 கோடியில் 130 கி.மீ. தூரத்துக்குச் சாலை அமைக்கிறார்கள். 7,000 பேருக்கு சைக்கிள் வழங்கினார்கள். அதாவது, நாங்கள் சைக்கிளில் செல்லத்தான் அந்தச் சாலைகளை அமைப்பதாக அரசாங்கம் நம்பச் சொல்கிறது? எங்களுக்கா தெரியாது? கனிம வளத்தைச் சுரண்ட வரும் பெருநிறுவனங்களின் கனரக வாகனங்களுக்காக அமைக்கப்படும் சாலை அது.

ஜார்கண்ட் அரசு இதுவரை இரும்புத்தாது எடுக்க 17 சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. எங்களுக்குச் செய்வதாகச் சொல்லிக்கொண்டு அவர்களுடைய வளர்ச்சிக்கான பணிகளைத்தான் அரசு செய்கிறது'' என்றார்கள்.

''இங்கு சி.ஆர்.பி.எஃப். வந்த பிறகு, நிலைமை எப்படி இருக்கிறது? அவர்கள் கை ஓங்கி இருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றோம்.

''அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். இங்குள்ள சி.ஆர்.பி.எஃப்-காரர்களில் சமீப காலத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எத்தனை பேர், படையைவிட்டு திடீரென்று காணாமல்போனவர்கள் எத்தனை பேர், விருப்ப ஓய்வில் போனவர்கள் எத்தனை பேர் என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப்பாருங்கள்... அவர்களுடைய நிலை தெரியும். அவர்கள் எங்களுடன் மோதினால், தோற்றுப்போவார்கள். ஆனால், அப்பாவி மக்களுடன் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்'' என்று அவர்கள் சொன்னபோதே, வெளியே இருந்த மர உச்சி ஒன்றில் இருந்து வித்தியாசமான குரல் ஒலித்தது.

தூரத்தில் கையில் அம்புகளுடன் ஆதிவாசிகள்!

அதிர்ச்சி தொடரும்

உளவு பார்க்கும் சிறப்பு போலீஸ்...

ஜார்கண்ட் மாநிலத்தில் இயங்கிவரும் 'ஜோகார்' (ஜார்கண்டீஸ் ஆர்கனைசேஷன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்) என்ற அமைப்பின் முக்கியப் பிரமுகரான கோபிநாத் கோஷ், ரமேஷ் ஜெர்ரி ஆகியோர் நம்மிடம் பேசினர்...

''கடந்த 30 வருடங்களாக எங்கள் அமைப்பு செயல்பட்டுவருகிறது. போலீஸார் தவறு செய்தாலும், மாவோயிஸ்ட் தவறு செய்தாலும் நாங்கள் களத்தில் போய் விசாரித்து உண்மை நிலையை வெளி உலகுக்குத் தெரிவிக்கிறோம்.

ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை, போலீஸ்தான் மாவோயிஸ்ட்களை உருவாக்கியது. இதனால்தான், போலீஸ் - மாவோயிஸ்ட் மோதல் ஒரு புறம் நடக்க... 'இவர் ஆளா? அவர் ஆளா?' என்கிற சந்தேகத்தில் இரு தரப்பினரும் துப்பாக்கியை உயர்த்துவதால் இறந்துபோகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. வேலையில்லாமல் கஷ்டப்படும் கிராமப்புற இளைஞர்கள் 6,500 பேரை சிறப்பு போலீஸ் என்ற பெயரில் உலவ விட்டிருக்கிறார்கள். இவர்களின் பணி, மாவோயிஸ்ட்களைப் பற்றித் துப்பு கொடுப்பது. மாதம் 3,000 சம்பளம் என்று ஆசை காட்டுகிறார்கள். இந்த இளைஞர்களும் தங்களை நிஜபோலீஸ் போல நினைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். செல்போன் தருகிறார்கள். அவ்வப்போது கொஞ்சம் பணம் தருகிறார்கள். இவர்கள் மீது சந்தேகப்படும் மாவோயிஸ்ட்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். துப்பாக்கி மோதலில் போலீஸ் இறந்தால், அவரது குடும்பத்துக்கு 40-50 லட்ச ரூபாய் நஷ்டஈடு, அரசு வேலை என்றெல்லாம் தருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு போலீஸ் பணியில் இருக்கும் அப்பாவிக் கிராம இளைஞர்கள் இறந்தால், போலீஸ் கண்டுகொள்வதே இல்லை. 'எங்களுக்கும் அவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை' என்று கைவிரித்து விடுகிறார்கள். பண்டாரிய மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸாரைக் கொன்றுவிட்டுத் ஓடிவிட்டனர். அந்தக் கிராமத்து மக்களையே போலீஸ் வாட்டி வதைத்தது. திருமண விழாவில் சிவப்பு வண்ணச்சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணை, 'மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவள்தானே’ என்று கேட்டு அடித்துத் துன்புறுத்தினர். இப்போதெல்லாம், கிராமத்து பெண்களில் பலர் சிவப்பு நிற உடை அணிவதையே தவிர்க்கிறார்கள்.

மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவர்கள், அதே பாணியில், வெவ்வேறு பெயர்களில் கிராமங்களில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார்கள். போலீஸுடன் பினாமிகளாகச் செயல்படும் அமைப்பினரும் உண்டு. இவர்கள் மாவோயிஸ்ட்களை எதிர்த்துச் சண்டை போட வேண்டும் என்பது ஒப்பந்தம். சில கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் கம்பெனியின் அறிவிக்கப்படாத கூலிப்படைகளாக ஒருசில அமைப்புகளை இயக்குகிறார்கள். துப்பாக்கி வாங்கித் தருகிறார்கள். ஏதாவது பிரச்னை என்றால், அந்த கம்பெனிகள் சார்பாக இவர்கள் சண்டை போடுகிறார்கள். மாவோயிஸ்ட் பாணியில் இவர்களும் வரி வசூலிக்கிறார்கள். இவர்கள் எங்காவது மாவோயிஸ்ட்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை வரும்போது, வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன''என்றனர்.