Published:Updated:

தலையங்கம் - 'நிதி'யே இது நீதியா?

தலையங்கம் - 'நிதி'யே இது நீதியா?

தலையங்கம் - 'நிதி'யே இது நீதியா?

தலையங்கம் - 'நிதி'யே இது நீதியா?

Published:Updated:
தலையங்கம் - 'நிதி'யே இது நீதியா?
தலையங்கம் - 'நிதி'யே இது நீதியா?

'வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் எல்லாப் பணமும் கறுப்புப் பணம் இல்லை’ என்று திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார் நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. 'வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் வெளியே கொண்டுவா!’ என்று பலமான போராட்டங்கள் வெடித்திருக்கும் வேளையில், 'அந்தப் பணத்தை எல்லாம் வெளியே கொண்டுவர அரசு என்ன செய்திருக்கிறது’ என்று அவர் பட்டியல் இட்டபோதுதான், இந்தப் பொன்னான தகவலையும் உதிர்த்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டு வங்கிகளில் யார் யார் முதலீடு செய்திருக்கிறார்கள்?  எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள்? உள்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யாமல், வெளிநாட்டு வங்கிகளில் ஏன் முதலீடு செய்தார்கள்? இந்தப் பணம் எல்லாம் எப்படி ஈட்டப்பட்டது? இந்தப் பணத்துக்கு எல்லாம் முறையாக வரி செலுத்தப்பட்டதா? இந்தப் பணம் எல்லாம் நம் நாட்டில் இருந்து சட்டத்துக்கு உட்பட்டுத்தான் வெளிநாட்டுக்குப் போனதா? - இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ஏற்கெனவே பதில் தெரியுமா?

வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, வழக்குபற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பே, அதை விசாரிக்க நியமிக்கப்படும் நீதிபதி - அந்த வழக்குபற்றிப் பொறுப்பு இல்லாமல் ஒரு கருத்து சொன்னால்... அந்த நீதிபதியின் நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும் அல்லவா? நீதிபதிக்குப் பொருந்தும் நீதி, இங்கே நம் நிதி அமைச்சருக்கும் பொருந்தும்!

விரைவு நீதிமன்றங்கள், கடுமையான தண்டனைகள் என்று வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சமீபத்தில்தான் மத்திய அரசு அறிவித்தது. நமது நிதி அமைச்சர் பேசியிருப்பதைப் பார்த்தால், மத்திய அரசு அறிவித்திருக்கும் அறிவிப்புகள் எல்லாம் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism