Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹிட்லர் - நேதாஜி நட்பு எப்படி உருவானது?

இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி நட்பு வைத்துக் கொண்டார். அவர் அமைத்த இந்திய தேசிய ராணுவம், ஜெர்மனியை மையமாக வைத்துத்தான் அமைந்தது. பிரான்சு நாட்டுக்குச் சென்று பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து அந்தப் படை போரிட்டது. ஜப்பானுக்கு ஆதரவாகக் களத்தில் தனது படைகளை நேதாஜி பயன்படுத்தினார். ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பான் செல்வதற்கு உதவிகள் செய்தார் ஹிட்லர்.

கழுகார் பதில்கள்!

அதற்காக ஜெர்மனியையும் ஹிட்லரையும் அவர் முழுமையாக நம்பிவிடவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையெடுத்த

போது, நேதாஜி நம்பிக்கை இழந்தார். தன்னுடன் இருந்த ஜெர்மனியின் உளவுத் துறை அதிகாரியிடம், 'இந்த யுத்தத்தில் ஜெர்மனி வெற்றி பெறாது. ஆனாலும் பிரிட்டன், இந்தியாவை இழந்துவிடும்’ என்று சொன்னார்.

வரலாற்றில் அதுதான் நடந்தது!

 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

கழுகார் பதில்கள்!

'தம்பி வா! தலைமை ஏற்க வா!’ என்று இன்று அழைக்கும் நிலை வந்தால், கருணாநிதி யாரை அழைப்பார்?

இன்று அந்த நிலைமை(!) வரவில்லை. எனவே, உங்கள் கேள்விக்கு அவசியமே எழவில்லை!

 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்!

இந்திராவின் மருமகள்களில் வெளிநாட்டு மருமகளுக்கு (சோனியா) கிடைத்த அளவுக்கு உள்நாட்டு மருமகளுக்கு (மேனகா) அந்தஸ்து கிடைக்காமல் போனது ஏன்?

##~##

மேனகாவுக்கு அந்த அந்தஸ்து கிடைக்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள்!

முதலாவது, இயற்கையின் சதி. அவரது கணவர் சஞ்சய், மிகச் சீக்கிரமே விபத்தில் இறந்து போனார். இரண்டாவது, மேனகா எடுத்த ஓர் அவசர முடிவு. இந்திராவின் வீட்டில் இருந்து அவரே திடீரென்று வெளியேறினார். இந்த இரண்டு காரணங்களால் மேனகா அந்தஸ்து இழந்தார்.

இதே நிலைமைதான் சோனியாவுக்கும் வந்தது. அதனை தனது புத்திசாலித்தனத்தால் வென்றார் அவர். ராஜீவ், 1989 தேர்தலில் தோற்றதும் 'இத்தாலிக்குப் போய்விடலாம்’ என்று சொல்லியவர் சோனியா. ஆனால், ராஜீவ் இறப்புக்குப் பிறகு, 'இது என்னுடைய தேசம். நான் வேறு எங்கும் போக மாட்டேன்’ என்று முடிவு எடுத்தார் சோனியா. இதுதான் சோனியாவுக்கு  மிகப்பெரிய முக்கியத் துவத்தை இந்திய அரசியலில் ஏற்படுத்திக் கொடுத்தது!

 முகவை.பாஸ்கர், சென்னை-15.

கழுகார் பதில்கள்!

அரசு விளம்பரங்களில் புரட்சித் தலைவி, அம்மா என்ற வார்த்தைகள் இடம்பெறலாமா?

கூடாதுதான்!

நாட்டில் மற்றது எல்லாமே சரியாக நடக்கிறது. இது ஒன்றுதான் தவறா?

 கலைஞர் ப்ரியா, வேலூர்( நாமக்கல்).

கழுகார் பதில்கள்!

விஜயகாந்த் கட்சியின் சின்னமான 'முரசு’ என்பதை 'கலைஞர் டி.வி.’யின் புதிய சேவைக்கு பெயராகச் சூட்டி இருப்பது சரியா?

நீங்கள் சொன்னதும் 'முரசு’வைப் பார்த்தேன். அதில் ஜெயலலிதா பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இதெல்லாம் பொழுதுபோக்கு. எனவே அந்த அளவுக்கு அர்த்தம் பார்க்கத் தேவை இல்லை.

விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு அல்ல... அவர் பிறப்பதற்கு முன்பே கருணாநிதி 'முரசொலி’ நடத்த ஆரம்பித்துவிட்டார். எனவே, அது புரட்சிக் கலைஞருக்கு முந்தைய கலைஞருக்கு முழு உரிமையானது என்றும் சொல்லலாம்!

 ஸ்ரீஉஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்!

'லஞ்சம் உருவானதே கருணாநிதி ஆட்சியில்தான்’ என்கிறாரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

லஞ்சத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டம். மேட்டூர் அணையைச் சேர்ந்த வாசகர் சி.வெங்கடேசன் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், திருத்தொண்டர் புராணத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்.

திருநாவுக்கரசரைக் கைது செய்யக் கட்டளை இடுகிறான் பல்லவ மன்னன். அப்போது, 'பொருள் செனண்டு விடாதென்பால் கொண்டுவாரும் எனப்புகன்றான்’ என்கிறது புராணம். அதாவது, 'பொருளைப் பெற்றுக்கொண்டு அவனை விட்டு விடாதீர்கள்’ என்று கட்டளை இட்டான். 12-ம் நூற்றாண்டிலேயே மந்திரிகள் பொருளைப் பெற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளார்கள்!

 கே.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.

கழுகார் பதில்கள்!

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ்... இவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன?

இவர்கள் அனைவருமே கூட்டணிகளை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள்தானே!

 போடி. எஸ்.சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்!

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நிதின் கட்கரியின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்து உள்ளாரே அத்வானி?

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர மட்டுமே அத்வானியின் செயல்பாடுகள் வழிவகுக்கும். சொந்தக் கோபதாபங்களைக் கட்சிப் பத்திரிகையில் வெளிப்படையாக எழுதியது அத்வானிக்கு அழகல்ல!

 ரேவதிப்ரியன், ஈரோடு.

கழுகார் பதில்கள்!

மக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது என்கிறாரே மன்மோகன்சிங்?

பெட்ரோல் விலை லிட்டருக்கு 150 ரூபாய் ஆனாலும் சகித்துக்கொள்ள வேண்டும், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என எத்தனை ஜிக்கள் ஊழல்கள் செய் தாலும் அதனைச் சகித்துக்கொள்ள வேண்டும், சுவிஸில் மட்டுமல்ல, உலகத்தில் எங்கு கொண்டு போய் கறுப்புப் பணத்தைப் பதுக்கினாலும் அதனைச் சகித்துக்கொள்ள வேண்டும்... இப்படி எதிர்பார்க்கிறாரா மன்மோகன்? மக்களிடம் சகிப்புத் தன்மை இல்லாதது நல்லதுதான்!

 தி.கருணாநிதி, விழிதியூர்

கழுகார் பதில்கள்!

புதுவை முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆட்சி பற்றி?

பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறது புதுவை. மார்ச் மாதம் போட வேண்டிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறார் ரங்கசாமி. டெல்லி சென்று திட்டக் கமிஷன் துணைத் தலைவரையும் பார்க்கவில்லை. ஆனால் யார் வீட்டில் இருந்து கல்யாணப் பத்திரிகை கொடுத்தாலும் மணமக்களுக்கு முன்பே இவர் ஆஜராகிவிடுகிறார். எல்லாக் கோயில் விழாக்களிலும் அவரைப் பார்க்கலாம். புதுவையில் எங்கு திரும்பினாலும் அவரது கட் அவுட்தான். புல்லட் ஓட்டுகிறார். தேர் ஓட்டுகிறார். குதிரை ஓட்டுகிறார். ஆட்சி மட்டும்தான் நொண்டி அடிக்கிறது!