எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

'எனது சொத்துக்களை அரசுக்குக் கொடுத்துவிட்டு நான் ரோட்டுக்கு வரத் தயார். நீங்கள் தயாரா? என்னால் அவற்றை மீண்டும் சேர்க்க முடியும். உங்களால் முடியுமா?’ என்று மற்ற ஆதீனங்களுக்கு நித்தியானந்தா சவால் விடுகிறாரே?

நித்தியானந்தா, அவரிடம் உள்ள சொத்துக்களை அரசுக்கு கொடுக்கலாம். ஏனென்றால், அது அவர் சேர்த்தவை. மற்ற ஆதீனங்கள் அப்படிச் செய்ய முடியாது. அவை காலம் காலமாக பல தலைமுறைகளாகச் சேர்க்கப்பட்டவை. அதை அரசாங்கத்திடம் சேர்க்க தன்னிச்சையாக அவர்கள் முடிவு எடுக்க முடியாது!

நித்தியானந்தாவைப் போன்று மற்ற ஆதீனங்களால் சொத்துக்களை மறுபடியும் சேர்க்கவும் முடியாது. ஏனென்றால், அவருக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தும் மற்ற ஆதீனங்களுக்குத் தெரியாது.

எனவே, இந்த சவால்... ரூல்டு அவுட்!

முரு.சொ.தியாகராஜன், சின்னசொக்கிகுளம்.

மாவோயிஸ்ட்களையும் நக்சல்களையும் நம் ராணுவத்தால் அடக்கவோ நசுக்கவோ முடியாதா?

அவர்கள் அந்தப் பகுதி மக்களோடு கலந்து வாழ்கிறார்கள் என்பதால்தான், அது சாத்தியம் இல்லை. 'தி பீப்பிள்’ பத்திரிகையின் நிருபரிடம் சட்டீஸ்கர் வட்டாரத்து எஸ்.பி. ஒருவர், 'பகலில் குச்சி பொறுக்கிக்கொண்டு இருக்கும் ஆண்களும் பெண்களும்தான் இரவில் துப்பாக்கி பயிற்சி பெறுகிறார்கள்’ என்றாராம்.

அருந்ததி ராயிடம் ஒரு போலீஸ் அதிகாரி, 'அந்த மக்களுக்கு ஆசைப்படத் தெரியவில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று எப்போது ஆசைப்படத் தொடங்குவார்களோ... அன்றுதான் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும்’ என்று சொல்லி இருக்கிறார். எனவே, அமைதி என்பது ராணுவத்தால் சாத்தியம் இல்லை!

பஞ்சவண்ண மகன், கருப்பம்புலம்.

திருமங்கலம் ஃபார்முலா, இப்போது ஓல்டு ஃபேஷன் ஆகிவிட்டதோ?

சங்கரன்கோவில், புதுக்கோட்டை என்று இடைத்தேர்தல் நடக்க நடக்க... ஃபார்முலாக்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், கரன்ஸி தான் எல்லா ஃபார்முலாக்களும் அடிப்படை!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப் பாளையம்.

முன்பெல்லாம் தேர்தல் பொறுப்பாளர்கள் என்று, ஐந்து பேரை நியமிப்பார்கள். இப்போது 52 பேரை நியமிக்கிறார்களே?

பிரசாரத்தைக் கவனிக்க ஐந்து பேர் போதும். பட்டுவாடாவைக் கவனிக்க 52 பேர் தேவை தானே!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஜனாதிபதி தேர்தல் முடிவு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. இன்றைக்கு வாக்களிக்கும் பலர், அந்த நாடாளுமன்றத்துக்குள் வர முடியாமல் போகலாம். ஆனால், அடுத்து அமையப்போகும் நாடாளுமன்றத்துக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஜனாதிபதிக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், அந்த ஜனாதிபதி தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைத் தீர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்!

ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

'தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்காவிட்டாலும், ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி’ என்கிறாரே சங்மா?

தேவை இல்லாமல் அவரது ஆசையைத் தூண்டிவிட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாத சங்கடத்தில் இருக்கிறார் சங்மா. போட்டியில் இருந்து விலகுவது அவருக்கு ஒன்றும் அவமானம் இல்லை. அவரை முன்மொழிந்தவர்களுக்குத்தான் அது அரசியல் ரீதியான சறுக்கல்!

சங்கத்தமிழன், சென்னிவீரம்பாளையம்.

லேட்டஸ்ட் சஸ்பென்ஸ் ஒன்று சொல்வீரா?

சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக விரக்தி அடைந்துள்ள ஒரு குரூப், பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சில இடங்களை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு, ரகசியத் தகவல்கள் மூலமாகப் போட்டுக்கொடுக்க ஆரம்பித்து உள்ளது. முதல் ரெய்டு முடிந்து விட்டது. அடுத்த ரெய்டுகள் தொடர உள்ளன.

போடி எஸ்.சையதுமுகமது, சென்னை-93 .

சமீப காலமாக போலீஸார் சில வழக்குகளில் திணறு கிறார்களே?

ராமஜெயம் வழக்கை நினைத்தால், வேதனையாக இருக்கிறது. இதுவரை, 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்து முடித்து விட்டார்கள். ஆனால், சின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை. 'போலீஸ் ஏதோ ஒன்றை மறைக்கிறது’ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்தக் காலதாமதம் போலீஸார் மீதான நம்பிக்கையைச் சிதைத்து விடும்!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இலங்கை, பாகிஸ்தான், சீனா - மூன்றில் இந்தியாவின் உண்மையான எதிரி நாடு எது?

பாகிஸ்தான் அந்த நினைப்புடன் செயல்படும் நாடு. அமெரிக்க சார்பு நடவடிக்கையை இந்தியா எடுத்தால், சீனா எதிரி நாடாக நினைக்கும். சீனாவின் முடிவைப் பொறுத்தது இலங்கையின் நிலைப்பாடு. இந்த அடிப்படையில் பார்த்தால் மூன்றும் இந்தியாவின் நட்பு வட்டத்துக்குள் வரத்தயங்கும் நாடுகளே!

கே.கே.வெங்கடேசன், வேலூர்.1

ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என்று ஏன் கூறுகிறார்கள்?

எந்தக் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர்களால் தேர்வு செய்யப்படுபவர்... அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுபவராக மட்டும்தானே இருக்க முடியும்? அவர்கள் சொல்லிய இடத்தில்தானே கையெழுத்துப் போட முடியும்? அதனால்தான்!

'இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணைக் கொண்டு வந்தது நாங்கள் தான்’ என்று எவ்வளவு ஜம்பம் அடித்தது காங்கிரஸ். இப்போது அவரால், 'எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரக்கூடாதா?’ என்றுகூட ஏன் கேட்க முடியவில்லை? ரப்பர் ஸ்டாம்ப்பாக இருந்ததால்... இருப்பதால்!