Published:Updated:

சக்தி வாய்ந்த பெண் தலைவர்கள்: சோனியாவுக்கு 3வது இடம்!

சக்தி வாய்ந்த பெண் தலைவர்கள்: சோனியாவுக்கு 3வது இடம்!
சக்தி வாய்ந்த பெண் தலைவர்கள்: சோனியாவுக்கு 3வது இடம்!
சக்தி வாய்ந்த பெண் தலைவர்கள்: சோனியாவுக்கு 3வது இடம்!

நியூயார்க்: உலகின் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில் சோனியா 3வது இடத்தில் இருப்பதாக அமெரிக்க பத்திரிகை பட்டியல் வெளியிட்டுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள், வர்த்தக ஜாம்பவான்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. 72 பேர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 21வது இடம் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில், சோனியா 3வது இடத்தில் இருப்பதாகவும் அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவுக்கு முன்பாக முதல் இடத்தில் ஜெர்மனி அதிபர் அங்கேலா மெர்கல்லும், இரண்டாம் இடத்தில் பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசப்பும் உள்ளனர்.

##~~##
இந்த பட்டியலில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவை விட 7 இடங்கள் பின் தங்கி உள்ளார்.