Published:Updated:

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க ஒப்புதல்!

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க ஒப்புதல்!
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க ஒப்புதல்!
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க ஒப்புதல்!

புதுடெல்லி: இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று மாலை, பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில், "காமன்வெல்த் மாநாட்டை இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னையாக கருதக் கூடாது. பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

##~~##
ஆகவே, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை' என்று முடிவு செய்யப்பட்டதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.