Published:Updated:

லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

விகடன் விமர்சனக்குழு
லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி!
லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி!
லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலுவின் ஜாமீன் மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

##~~##
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.