Published:Updated:

காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது: பிரதமரிடம் வாசன் வலியுறுத்தல்!

புதுடெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தி்த்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 33க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. கனடா இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது.

இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

##~~##
தமிழக மீனவர் பிரச்னை குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார் என்றும், மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளதாகவும் ஜி.கே.வாசன் கூறினார்.