Published:Updated:

காமன்வெல்த்: காங்கிரசின் முடிவை திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்

காமன்வெல்த்: காங்கிரசின் முடிவை திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்
காமன்வெல்த்: காங்கிரசின் முடிவை திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்
காமன்வெல்த்: காங்கிரசின் முடிவை திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்

சென்னை: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என காங்கிரஸ் எடுத்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று கூடிய காங்கிரஸ் உயர்மட்ட குழு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தி.மு.க. தலைவருக்கு பிரதமர் எழுதி உள்ள கடிதத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறான முடிவை காங்கிரஸ் உயர்மட்டக் குழு எடுத்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்பப் பெற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

##~~##
இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும். 1967 ஆம் ஆண்டு ஏற்பட்ட பின்னடைவை விட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என நேரடியாகவே வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை கண்டித்தும், இந்த முடிவை திரும்ப பெறக்கோரியும் வருகிற 3 ஆம் தேதி எனது தலைமையில், சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய தலைவராக ராஜபக்சேவை தேர்வு செய்யக் கூடாது என காமன்வெல்த் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளுக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மின் அஞ்சல் அனுப்பப்படும்'' என்றார்.