Published:Updated:

படேலை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது: மோடி

படேலை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது: மோடி
படேலை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது: மோடி
படேலை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது: மோடி

அகமதாபாத்: சர்தார் படேலை ஒரே ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடுவது அவரை தரம் தாழ்த்துவதாகும் என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோடியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினர்.

அப்போது, இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் ஆகியிருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று மோடி கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய மன்மோகன் சிங், வல்லபாய் படேல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும், அவர் மதச்சார்பற்றவராக திகழ்ந்தார் என்றும், படேல் இருந்த இருந்த கட்சியில் தாமும் இருப்பதை பெருமையாக கருதுவதாகவும் கூறியிருந்தார்.

##~~##
இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் பங்கேற்றுப் பேசிய மோடி,"ஒரே ஒரு கட்சிக்கு சொந்தமானவராக படேலை ஒதுக்கி வைப்பதன் மூலம், அவரை நீங்கள் ( மன்மோகன் சிங்) தரம் தாழ்த்துகிறீர்கள். மோடி உண்மையான மதச்சார்பற்றவராக திகழ்ந்தார். நமக்கு தேவை படேலின் மதச்சார்பின்மைதானே தவிர, ஓட்டுவங்கி அரசியல் அல்ல" என்று கூறினார்.