Published:Updated:

'ஆபரேஷன் ஆம்லா" ஒத்திகை தொடங்கியது!

'ஆபரேஷன் ஆம்லா" ஒத்திகை தொடங்கியது!
'ஆபரேஷன் ஆம்லா" ஒத்திகை தொடங்கியது!
'ஆபரேஷன் ஆம்லா" ஒத்திகை தொடங்கியது!

சென்னை: தீவிரவாத தடுப்புசோதனை ‘ஆபரேஷன் ஆம்லா’இன்று தொடங்கியது.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆபரரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவும் போலீசாரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மடக்கி பிடிக்க வேண்டும். இது தான் இந்த ஆபரேஷனின் முக்கிய நோக்கம்.

இதற்கு முன்னர் பல முறை நடத்தப்பட்டுள்ள இந்த ஆபரேசனின்போது பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகள், தீவிரவாதிகள் வேடத்தில் வந்த போலீசாரை மடக்கி பிடித்துள்ளனர்.

##~~##
தமிழகத்தின் கடலோர பாதுகாப்பில் இருக்கும் நிறை குறைகளை கண்டறிய இரண்டு நாட்கள் நடத்தப்படும் 'ஆப்ரேசன் ஆம்லா' இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இதற்காக, கடலோர பாதுகாப்பு படையினர், தமிழக போலீசார், கஸ்டம்ஸ் அதிகாரிகள், கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வனத்துறையினர் ஆகியோர் தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரியில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துடன் இணைந்து அண்டை மாநில அதிகாரிகளும் 'ஆபரேஷன் ஆம்லா' ஒத்திகையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.