Published:Updated:

அரசியலில் இருக்கிறேன் என்று காட்டவே கருணாநிதி அறிக்கை விடுகிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு: நானும் அரசியலில் இருக்கிறேன் என்று மக்களுக்கும், தொண்டர்களுக்கும் காட்டவே தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுகிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் இன்று நிருபர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "இலங்கைத் தமிழர்களுக்கான முழு உரிமைகளையும் பெற்றுத்தர வேண்டும் என்றால் இலங்கையுடன், இந்திய அரசு சுமூக உறவுடன் இருப்பது முக்கியம். அதற்கு, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை அகதிகளின் பராமரிப்பில் இங்குள்ள சில அரசியல்கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தேவையற்ற வாதங்களை கிளப்பி விடுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல்கட்சிகள் பேசாமல் இருந்தாலே எங்களது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என இலங்கைத் தமிழர் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அரசு 48 ஆயிரம் கோடி ரூபாய் இலங்கை தமிழர்களுக்காக நிதி உதவி வழங்கி, இலங்கை அரசு மூலம் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகதான் வடமாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் நடைபெற்று விக்னேஷ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.

##~~##
நானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு காட்டிக்கொள்ளவே தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

வல்லபாய் படேல் பற்றியோ அல்லது வேறு காங்கிரஸ் தலைவர்கள் பற்றியோ பேச மோடிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஊதப்பட்ட பலூனை போன்றவர். இன்னும் 6 மாதங்களுக்கு பின், அண்ணா ஹசாரே போல் காணாமல் போய்விடுவார்." என்றார்.