கே.செந்தில்குமார், கொளத்தூர்.

துறவிகளுக்கு தங்க சிம்மாசனம், தங்கக் கிரீடம், தங்க மாலை, தங்க செங்கோல்... இவை எல்லாம் எதற்கு?

நீங்கள் கேட்பதெல்லாம் புறத்தே காணும் நெருடல்கள். இது மாதிரியான சில துறவிகள் அக விஷயங்களிலேயே சரியானவர்களாக இல்லை. 'நான்தான் அனைத்தும், நான்தான் கர்த்தா என்ற எண்ணத்தையே எவன் துறந்து விடுகிறானோ அதுதான் ஸந்யாஸம். இதுதான் உண்மையான துறவு’ என்று கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொல்கிறார்.

இதுபற்றி ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதி இருக்கிறார். 'ந்யாஸம் என்றால் தியாகம் செய்தல், துறப்பது. 'ஸம்’ என்றால் 'நல்ல' என்று பொருள்படும். 'ந்யாஸம்’ என்பதற்கும் 'ஸம்-ந்யாஸம்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. துன்பத்தினாலோ வறட்டு கௌரவத்தினாலோ, வீம்பினாலோ ஒன்றைத் துறந்துவிட்டு, 'நான் விட்டுவிட்டேன், தியாகம் செய்து விட்டேன்’ என்றால் அது 'ந்யாஸம்’ ஆகும். ஏனென்றால், விட்ட பொருளுக்கான ஏக்கம், நஷ்ட உணர்வு மனதில் இன்னும் இருக்கிறது. ஆனால், எவ்வித நஷ்ட உணர்வோ, ஏக்கமோ, அல்லது 'அப்பாடா... என்னை விட்டு அது ஒழிந்ததே’ என்ற விடுதலை உணர்வோ இல்லாமல் துறந்தால்... அதுவே 'ஸம்-ந்யாஸம்’ ஆகிறது’ என்று சொல்லி இருக்கிறார்.

நீங்கள் சொல்கிற மனிதர்கள் உண்மையான 'ஸம்-ந்யாஸிகள்’ அல்ல!

வி.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

ஜனாதிபதியை பொதுமக்கள் தேர்ந்தெடுத்து அனுப்ப இங்கே சட்டத்தில் இடம் உள்ளதா? இனி வருங்காலங்களில் இதுபோல் சட்டம் இயற்ற வாய்ப்பு உண்டா?

இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தில் அத்தகைய வாய்ப்பு இல்லை. இது நாடாளுமன்ற அமைப்பு முறையைக் கொண்ட அரசு. இங்கு, பெயரளவிலான நிர்வாகத் தலைவர்தான் ஜனாதிபதி. உண்மையான அதிகாரம் அமைச் சரவையிடம்தான் உள்ளது.

'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைப்பவர்கள் கூட இத்தகைய மாறுதலை வலியுறுத்துவது இல்லை. எனவே, இந்தியாவில் இது சாத்தியம் இல்லை!

கு.முருகானந்தம், பருத்திக்குடி.

பெருந்தலைவர் காமராஜ், அவரின் கடைசிக் காலங்களில் இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டாராமே. எதனால்?

நேருவுக்கு அடுத்து லால்பகதூர்... அவருக்கு அடுத்து இந்திரா என பிரதமர்களை அடையாளம் காட்டுபவராக இருந்தார் காமராஜர். 64-67 கால கட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை வகித்தார். மூன்றாவது முறையாக தலைவராக அவர் விரும்பவில்லை. பிரதமர் இந்திராவும் அதை விரும்பவில்லை. நிஜலிங்கப்பா தலைவராக ஆனார். நிஜலிங்கப்பாவுக்கும் இந்திராவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அதன்அடிப்படையில், ஸ்தாபன காங்கிரஸ்(ஓ), இந்திரா காங்கிரஸ்(ஐ) என்று, கட்சியே அகில இந்திய அளவில் இரண்டாக உடைந்தது. அப்போது காமராஜர், ஸ்தாபன காங்கிரஸில்தான் இருந்தார்.

'நேருவின் மறைவுக்குப் பிறகு கூட்டுத்தலைமை அமைத்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்திரா அதற்குச் சரிப்படவில்லை’ என்று காமராஜர் பேசி வந்தார். இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் பிரிந்து போட் டியிட்டன.

இரண்டையும் இணைக்க வேண்டும் என்று காமராஜரிடம் பலரும் சொன்னார்கள். '75-ம் ஆண்டுக்குப் பிறகு பார்க்கலாம்’ என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். ஆனால், புதுவைத் தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதித்தார். அவசர நிலைப் பிரகடனம் கொண்டு வந்து, 75 ஜூன் மாதம் கொந்தளிப்பை உருவாக்கினார் இந்திரா. 'இது ஜனநாயகத்துக்கு எதிரான செய்கை’ என்று பிரசாரம் செய்யக் கிளம்பினார் காமராஜர். ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அக்டோ பரில் மறைந்து போனார்.

மிக நீண்ட வரலாற்றின் சுருக்கம் இதுதான். கட்சியில் சர்வாதிகாரத் தன்மையும் ஆட்சியில் ஜனநாயக மறுப்பு குணமும் இந்திராவிடம் இருந்ததுதான் காமராஜர் அந்நியப்பட அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம்!

இரா.கல்யாணசுந்தரம், மதுரை.

'கலாம் என்பதற்கு கலகம்’ என்று எந்த அகராதியில் இருக்கிறது?

கருணாநிதியின் மனதில் உள்ள வெறுப்பின் வெளிப்பாடு இது. கலாம் என்பதன் உண்மையான பொருள் 'குரான்’ என்பது உள்பட பலரும் விளக்கம் அளித்து விட்டார்கள்.

அப்துல் கலாமை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் கருணாநிதியின் தனிப்பட்ட விருப்பம். அதற்காக தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப வார்த்தைகளை வளைப்பது, அனர்த்தம்!

எஸ்.சையது முகமது, சென்னை-93.

தான் செய்த நான்கு தவறுகள் என்று ராசா பட்டியலிட்டுள்ளதை படித்துப் பார்த்தீர்களா?

'மந்திரியாக ஆனது ஐந்தாவது தவறு’ என்று சேர்த்துச் சொல்லி இருக்கலாம்!

கே.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.

சோனியா, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா ஆகிய நால்வரும் சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?

நான்கு பேரும் சந்திக்க நேர்ந்தால்... முகத்தைத் திருப்பிக் கொண்டு, எதையும் பேசாமல் 'உம்'முன்னு இருப்பார்கள்!

ஜி.குப்புசாமி, வடபழனி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று ராமதாஸ் கூறியுள் ளாரே?

போட்டியிடும் என்றுதானே சொல்லி இருக்கிறார். அதற்கு ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள்? ஜெயிக்கும் என்று கூட சொல்வார் அவர்!

மதுராந்தகம் குமார், செங்கல்பட்டு.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மாற்றம் வருமா?

கருணாநிதியுடன் காங்கிரஸ் இருக்கப் போகிறதா என்பதைப் பொறுத்த விஷயம் அது!

வி.எஸ்.சேனாதிபதி, வேலூர்-9.

வாஜ்பாய் எப்படி இருக்கிறார்?

வளர்ப்பு மகள் வீட்டில், தன்னு டைய இயல்பைப் போலவே அமைதியாய் இருக்கிறார். 'அனைத்து அரசியல்வாதிகளும் ஒரு கட்டத்துக்குப் பிறகு நிம்மதியாக ஓய்வு எடுக்க வேண்டும்’ என்ற பாடத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பி.ஜே.பி-யில் நடக்கும் வெட்டுக்குத்துக்களைப் பார்த்து, 'நல்ல வேளை எப்போதோ ஒதுங்கி விட்டோம்’ என்ற நிம்மதிப் பெருமூச்சையும் வாஜ்பாய் விடலாம்!

மதன்குமார், புதுக்கோட்டை.

ஒருவேளை புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தே.மு.தி.க. ஜெயித்திருந்தால்...?

பாவம் ரோசய்யா... கால்கடுக்க நின்று 32 புதிய மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பார்!