Published:Updated:

கொடுத்த சம்பளத்தை திருப்பிக் கேட்பாங்களோ?

கே.கே.மகேஷ்படம் : சாய் தர்மராஜ்

கொடுத்த சம்பளத்தை திருப்பிக் கேட்பாங்களோ?

கே.கே.மகேஷ்படம் : சாய் தர்மராஜ்

Published:Updated:
##~##

2009    -ம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் நடந்த இடைத் தேர்தல் செல் லாது. அரசு விரும் பினால், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ- வாக இருந்த மதியரச னிடம் இருந்து, அவர் பதவிக் காலத்தில் அனுப வித்த பணச் சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெறலாம்!’ - கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த திகீர் தீர்ப்பு இது.

 அந்தத் தேர்தலில் 'மக்கள் மாநாட்டுக் கட்சி’யைச் சேர்ந்த கலைமணி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்துக் கலைமணி போட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ-வாக இருந்த மதியரசனிடம், ''என்னங்க..?'' என்றால் பொங்குகிறார் மனிதர்.

''கேஸ் போட்ட கலைமணி நம்ம சொந்தக்காரர்தான். ஏதோ ஒரு ஆகாத கட்சி வெச்சுக்கிட்டு இப்படிலாம் பண்ணிக்கிட்டுத் திரியுறாப்ல. அவரோட வேட்புமனு சரியில்லைனு அதிகாரிங்க தள்ளுபடி பண்ணதுக்கு, நான் என்ன பண்ணுவேன்? அதுக்கு அதிகாரிங்கதான் பொறுப்பு. அட, அதை விடுங்க...

கொடுத்த சம்பளத்தை திருப்பிக் கேட்பாங்களோ?

ஏதோ அவர் தேர்தல்ல நின்னிருந்தா மட்டும் ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகியிருப்பார்ங்கிற மாதிரியே பேசிக்கிட்டு திரியுறாப்ல. இதுக்கு முந்தியே ரெண்டு, மூணு தடவை தேர்தல்ல போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்தான் அந்தக் கலைமணி. நாம காசு பணத்தைச் செலவழிச்சு, நாயா, பேயா உழைச்சு எம்.எல்.ஏ. ஆன பிறகு, அது செல்லாதுன்னா எப்படி? அவர் கேஸ் போட்டப்பவே நானும் ஒரு வக்கீலைப் பிடிச்சேன். அப்புறம் 'நம்ம மேல ஒண்ணும் கேஸ் போடலியே’னு விட்டுட்டேன். இப்பப் பார்த்தா இப்படி ஆயிருச்சு!''

''பண பலனைத் திரும்பக் கேட்டா என்ன பண்ணுவீங்க?''

''அதெல்லாம் ரொம்பக் கொடுமைங்க! இப்பக்கூட மாசம் 12 ஆயிரம் பென்ஷன் வாங்கிட்டு இருக்கேன். கொடுத்த சம்ப ளத்தை எல்லாம் மொத்தமாக் கேட்டுரு வாங்களோனு வீட்ல பயப்படுறாங்க. 'ஒண்ணும் ஆகாது... நாம அப்பீல் பண்ணு வோம்’னு வீட்டம்மாகிட்ட சொல்லி இருக்கேன்!''

''கலைமணிக்கு உங்க ஆட்கள் கொலை மிரட்டல் விடுறாங்களாமே?''

''அடிக்கிறதா இருந்தா, நான் எம்.எல். ஏ-வா இருக்கிறப்பவே அடிச்சிருக்கணும். அப்பதான அவர் வழக்கு போட்டார்? இப்போ எதிர்க் கட்சியா இருந்துக்கிட்டு கை வைப்போமா?''

''தலைவர் என்ன சொன்னாரு?''

''அந்தச் செய்தி 'தி.மு.க. வேட்பாளரின் வெற்றி செல்லாது’னு வெளிவரவும், கொதிச்சுட்டார் தலைவர். அந்தத் தீர்ப்பால் கட்சிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லைனு காட்டமா அறிக்கை விட்டுட்டார். கடைக்கோடி தொண்டன் எனக்காக தலைவர் பரிஞ்சு பேசியதைப் பார்த்து ரொம்ப நெகிழ்ச் சியா இருந்துச்சு.

நைட்டோடு நைட்டா சென்னைக்குப் போய், தலைவரைப் பார்த்து நன்றி சொன்னேன். 'அடுத்து என்னய்யா பண்ணப்போற?’னு கேட்டார். 'அப்பீல் பண்ணிருவோம் தலைவரே’னு சொல்லியிருக்கேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism