அர்ஜுனன்.ஜி, திருப்பூர்-7.

இந்திரா காங்கிரஸ் - சோனியா காங்கிரஸ் ஒப்பிடுக!

இந்திராவைக் கேள்வி கேட்கும் நிமிர்ந்த தலைவர்கள் அந்த காங்கிரஸில் இருந்தார்கள். குட்டுவதற்கு முன்பே குனியத் தயாராய் இருக்கும் பிரமுகர்கள் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.

இந்திராவுக்கு பலரையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. சோனியாவுக்கு அனைவருக்கும் பங்கிட்டுத் தர வேண்டிய அவசியம் மட்டுமே உண்டு.

சுய தைரியத்தின் மூலமாக இந்திரா வென்றார். சிலரின் சுயநலமே சோனியாவை வெற்றிபெற வைத்து விட்டது!

காந்தி லெனின், திருச்சி.

அரசுக்கு எதிரான தி.மு.க-வின் போராட்டம் சரியானதா?

பாம்பு கடிக்காவிட்டாலும் சீறிக்கொண்டு இருந்தால்தான் வாழ முடியும் என்பார்கள். அரசியல் கட்சிகளுக்கும் அப்படித்தான். போராட்டம் நடத் தினால்தான், இருப்பைத் தக்க வைக்க முடியும்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகம் முதல் கே.கே.நகர் தனசேகரன் வரை, வரிசையாக குண்டர் சட்டத்தில் கைதாகி வருவதைத் தடுக்க இந்தப் போராட்டம் கை கொடுக்குமா என்று பார்க்கிறார் கருணாநிதி. ஆனால், அதுவே ஜெயலலிதாவை இன்னும் தூண்டி விடுவது மாதிரி அமைந்து விட்டால்..?

முரு.சொ.தியாகராஜன், மதுரை.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அமெரிக்கா ஒழித்துவிடுமா?

அமெரிக்கா விதைத்த விஷ வித்துதான் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக முளைத்துப் பல்கிப் பெருகி வருகிறது. ஆரம்ப காலத்தில், தனக்கான ஏவல் படையாக அவர்களையே பயன்படுத்தியது அமெரிக்கா. ஆனால், அவர்களே எதிரிகளாக வளர்ந்து, இன்று அதிதீவிரமாகப் போன பிறகு... ஒழிக்கத் திட்டம் இடுகிறது அமெரிக்கா. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள், தெற்காசியா முழுக்க வெவ்வேறு அடையாளங்களுடன் பரவி இருக்கிறார்கள். அவர்களைத் தனிமைப்படுத்தி அழிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அமைதி இன்மையின் தலையெழுத்து அது!

சமூகக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, நாடுகளின் நல்லுறவு, பொருளாதார மேம்பாடு, அமைதியின் மீதான ஆர்வம்.... ஆகிய ஐந்தும் சம்பந்தப்பட்ட பிரச்னை அது. ஒன்று சறுக் கினாலும் பயங்கரவாதம் தலைதூக்கும். எனவே, நாட்டின் தலைவர்கள் தங்களது உரைகளில் வேண்டுமானால், 'பயங்கரவாதிகளை ஒழிப்போம்’ என்று சொல்லிக் கொள்ளலாம்!

கலைஞர் ப்ரியா, வேலூர் (நாமக்கல்).

கடைசியில், நீதிபதியையே மாற்றும்படி மனுப்போட்டு விட்டார்களே?

அடுத்த மனுவும் தயாராக இருக்கலாம்... சட்டத்தையே மாற்றுங்கள் என்று!

கே.எஸ்.சம்பத்குமார், பெங்களூரு.

தி.மு.க. முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் மு.க. அழகிரி, தி.மு.க. கூட்டங்களையே புறக்கணிக்கிறாரே?

இது, கருணாநிதி கவலைப்பட வேண்டிய கேள்வி. ஆனால், இந்திய அரசியல் அமைப்பின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் அழகிரி, அவரது துறை வேலைகளைக் கவனிப்பது இல்லை, நாடாளுமன்றத்தில் துறைசார்ந்த அறிவிப்புகளைச் செய்வது இல்லை, டெல்லி அலுவலகத்துக்கு முறையாகச் செல்வது இல்லை, கேபினெட் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வது இல்லை, முக்கிய முடிவுகளை எடுக்க மூத்த அமைச்சர்களோடு ஆலோசனை செய்வது இல்லை என்று, டெல்லி முழுக்கப் புகார்கள். அதுதான் பொதுமக்களும் நாமும் கவலைப்பட வேண்டிய விஷயம். இது, வாக்களித்த மக்களுக்குச் செய்யும் கடைந்தெடுத்த துரோகம்!

வி.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

வெள்ளம் வருவதற்கு முன் தடுப்பது போல, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களைக் கண்டித்தார் முதல்வர். அவர்கள் அடங்கி விட்டார்களா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குபோல நடந்து கொள்கிறார்களா?

'நாங்க பணம் கொடுத்துத்தான் இந்த ஸீட்டு வாங்கினோம். போட்டதை எடுக்க வேண்டாமா?’ என்று சிலரும், 'இருக்கிறது கொஞ்ச காலம், அதுக்குள்ள முடிஞ்சதைப் பார்த்துடுவோம்’ என்று சிலரும், 'அம்மா அப்படித்தான் சொல்வாங்க... அப்புறமா கண்டுக்க மாட்டாங்க’ என்று சில ரும் சொல்லி வருவதாகக் கேள்வி!

பயந்து நடுங்கி அமைதி ஆனவர்கள் ஒன்றிரண்டு பேர்தான்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

'சிறை செல்வோருக்கு மட்டுமே இனி கட்சியில் பதவி’ என்று ஸ்டாலின் சொல்கிறாரே?

எதையாவது தந்தால்தான் சிறைக்கு வருவான் தொண்டன் என்ற நிலைமை ஏற்பட்டதே, ஒரு கட்சியின் வீழ்ச்சிக்கு அடையாளம்!

எஸ்.சையது முகமது, சென்னை-93.

'மதுக் கடைகளை மூடத் தேவை இல்லை’ என்கிறாரே தா.பாண்டியன்?

அதற்கு அவர் சொன்ன காரணம்தான்அபத்தமானது. 'தமிழகத்தில் மதுக் கடைகளைமூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்து விட்டு வருவார்கள்.’ என்று கண்டுபிடித்து இருக்கிறார் தா.பா. இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரா அல்லது டாஸ்மாக் நிறுவன இயக்குநரா எனத் தெரியவில்லை. யாரோ எங்கோ போய்க் குடித்துவிட்டு வந்தால், இவருக்கு என்ன? தமிழ்நாட்டுக்குக் குடிவருமானம் போய்விடுமே என்ற கவலை ஏன் கம்யூனிஸ்ட் தலைவருக்கு?

அரசு கஜானாவுக்கு நிதி திரட்டுவதற்காக மது விற்பனையை நிதி அமைச்சர் அனுமதித்தபோது, திப்பு சுல்தான் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனைக் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?’ என்று கேட்டவர் திப்பு. தா.பா. சொல்வதெல்லாம் தப்பு! காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் பூரண மதுவிலக்கு பிரசாரத்தை சென்னையில் தொடக்கி வைத்து நல்லகண்ணு கையெழுத்துப் போட்ட அதேநாளில்தான் ஓசூரில் தா.பா. இப்படி பேட்டி அளித்துள்ளார். ஒருவேளை, நல்லகண்ணு மீது பாண்டியனுக்கு ஏதாவது கோபமா?

ஸ்ரீஉஷாபூவராகவன், படியூர்.

மம்தாவை காங்கிரஸ் தனிமைப்படுத்துகிறதா?

மம்தாவை தேசிய அரசியலில் வேண்டுமானால் தனிமைப்படுத்தலாம். ஆனால் மேற்கு வங்க அரசியலில் அது முடியாது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது!

கே.ஏ.என்.சிவம், பெங்களூரு

சங்மாவை வீம்புக்காக ஆதரிக்கிறதா பி.ஜே.பி.?

வேறு வழி இல்லாமல் ஆதரிக்கிறது. அப்துல் கலாமிடம் கெஞ்சிக்கெஞ்சிப் பார்த்தார்கள். கலாம், 'ஆளைவிடுங்க’ என்று சலாம் போட்டுவிட்டார். கண்ணுக்குத் தெரிந்தது சங்மாதான்.

அடுத்து நாங்கள்தான் மத்தியில் ஆளும் கட்சி என்று சொல்லும் பி.ஜே.பியால் நல்ல ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக்கூட அடையாளம் காட்ட முடியாதது அரசியல் சோகம்!