Published:Updated:

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

Published:Updated:
##~##

ழுகார் உள்ளே நுழைந்ததும், ''விருதுநகர் மாவட்டக் கலெக்டர் பாலாஜியைப் பற்றிய விவரங்கள் தனியாக வருகிறதுதானே!'' என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். 

''விருதுநகரில் நடந்து வரும் வில்லங்கங்களை உளவுத் துறை சேகரித்து மேலிடத்துக்கு அனுப்புவதற்கு முன்பே நான் உமக்குச் சொன்னேன். இப்போது கலெக்டர் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு உள்ளார். 'இதன் பின்னணியில் நடந்த விஷயங்கள் முதல்வருக்கு முழுமையாகத் தெரியுமா எனத் தெரியவில்லை. தெரிந்தும் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால், அது மிகமிகக் கவலைக்கு உரியது... கண்டனத்துக்கு உரியது'' என்றவர் பிரணாப் மேட்டருக்கு வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி, சென்னையில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருப்பதில், கருணாநிதிக்கு பெரிய சந்தோஷம். 'காங்கிரஸ் மீது தலைவருக்கு இருந்த கோபம் மொத்தமாகக் குறைந்து விட்டது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். ஸ்டாலினும் அழகிரியும் விமான நிலையத்துக்கே சென்று பிரணாப் முகர்ஜியை வரவேற்று அழைத்து வந்தனர். புதுச்சேரி விழாக்களில் கலந்துகொள்ள முந்தைய நாள் வந்த பிரதமரை வரவேற்க அழகிரி வரவில்லை. அப்போதாவது அவர் மதுரையில் இருந்தார். ஆனால், சென்னையைவிட்டுப் பிரதமர் புறப்படும்போது, சென்னைக்கு வந்து விட்டார் அழகிரி. ஆனாலும் விமான நிலையத்துக்கு அவர் செல்லவில்லை!''

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

''இதை எல்லாம் யார் கேட்பது?''

''ஆனால், பிரணாப் முகர்ஜியை வரவேற்க சரியாக வந்து விட்டார் அழகிரி. 'பிரணாப் மீது அழகிரிக்கு அதிகப்பாசம். அவரது மகன் துரை.தயாநிதி திருமணத்துக்காக மதுரை வந்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி.

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

அவர்தானே!’ என்கிறார்கள். 'ஸ்டாலினும் அழகிரியும் விமான நிலையத்துக்கு கட்டாயம் போக வேண்டும்’ என்று கருணாநிதி சொல்லி விட்டாராம். அங்கே இருந்து நேராக சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு பிரணாப் வந்தார். அதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லையாம்.''

''ஏனாம்?''

''பிரணாபுடன் கனிமொழிக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை ஸ்டாலின் தரப்பு விரும்பவில்லை. அதனால், விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்து​விட்டு அண்ணனும் தம்பியும் கழன்றுகொள்ள... டி.ஆர்.பாலு மட்டும்தான் பிரணாபை அழைத்து வந்தார். மேளதாளம் முழங்க சி.ஐ.டி. காலனியில் சால்வையுடன் வாசலில் நின்று கனிமொழி அவரை அழைத்துச் சென்றார். 'என் பெயரை நீங்கதான் சொன்னீங்க. உங்களுக்கு முதல் நன்றி’ என்று பிரணாப் சொன்னாராம். இந்தக் காட்சிகளை மத்திய உளவுத் துறை, உன்னிப்பாகக் கவனித்தது. 'சர்ச்சைக்குரிய ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களோடு ஜனாதிபதி வேட்பாளர் நிற்பது சரியா?’ என்ற கோணத்தில் அவர்கள் சில குறிப்புகளை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்களாம்!''

''அரசியல்!''

''கோபாலபுரம் வீட்டில்தான் பிரணாபை சந்திக்க வேண்டும் என்று ஸ்டாலினின் கோரிக்கையை கருணாநிதி ஏற்காததில் வருத்தமாம். அதனால் அடுத்து நடந்த அடையாறு கேட் ஹோட்டல் விருந்தில் ஸ்டாலினும் அழகிரியும் மையமாக உட்கார வைக்கப் பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்ஆகியோருடன் தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. சில மாவட்டச் செயலாளர்கள் ஆர்வத்துடன் வந்தார்கள். அனுமதி இல்லை என்றதால் வருத்த ரேகைகளைப் பார்க்க முடிந்தது!''

''இந்தக் களேபரத்தில் பேராசிரியர் அன்பழகனைக் காணோமே?''

''நெல்லை, தூத்துக்குடியில் பேசுவதற்கு அவர் தேதி கொடுத்திருந்தார். இதற்காக, அதைக் கேன்சல் செய்ய வேண்டும் என்று தலைமை சொன்னபோது 'அதெல்லாம் தேவை இல்லை’ என்று அவர் ரயில் ஏறிச் சென்று விட்டார். எனவே, கொண்டாட்டங்களில் அன்பழகன் மட்டும் மிஸ்ஸிங்!''

''ஓஹோ!''

''பிரணாப் சென்னை வந்துவிட்டு திரும்பிப் போக ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து இருந்தனர். சென்னை பழைய ஏர்போர்ட்டில் வி.ஐ.பி. கேட் வழியாக பிரணாப் கார் உள்ளே போனது. அவருடன் டி.ஆர்.பாலுவும் சென்று விட்டார். விமானம் அருகே நின்றுகொண்டு பிரணாப் திரும்பிப் பார்க்க.. அங்கே வி.ஐ.பி-க்கள் யாரும் இல்லை. சற்றுத்தூரத்தில், சால்வையுடன் நின்ற வி.ஐ.பி-க்களை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளே விடவில்லை. 'பாஸ் இருந்தால்தான் விடுவோம்' என்று தடுத்து விட்டனர். பொதுவாகவே, விமானநிலையத்தில் வி.ஐ.பி-க்களை வழியனுப்ப வரும்போது, ஒரு லெவலுக்குத்தான் யாரையும் அனுமதிப்பார்கள். மத்திய மந்திரி அந்தஸ்தில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே விமானத்துக்கு அருகே செல்ல முடியும். விமானம் வரை போய் பிரணாபை வழியனுப்ப விரும்பிய வி.ஐ.பி-க்கள் கையில் எந்தப் பாஸும் இல்லை. அவர்கள் போலீஸாரின் பிடியில் சிக்கி நிற்க... 'பிரணாப் கூப்பிடுகிறார்' என்று அவசரமாக அழைத்திருக்கிறார் டி.ஆர்.பாலு. அதைக் கேட்டதும் காங்கிரஸ் எம்.பி-க்களான ஞானதேசிகன், விஸ்வநாதன், ஆரூண் மற்றும் பி.ஏ-க்கள் மூன்று பேர், இரண்டு வக்கீல்கள் எல்லாம் போலீஸை மீறி விமானம் அருகே போய்விட்டனர். விமானத்தின் கீழே நின்றிருந்த பிரணாபிடம் சால்வையைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பினர். இதைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 'சிலர் அத்துமீறி உள்ளே வந்து விட்டனர்' என்று தங்கள் உயர் அதிகாரிகளுக்கு வயர்லெஸில் தகவல் கொடுத்தனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை''

''ம்!''

''ஜெயா டி.வி-யில் பல்வேறு தகிடுதத்தங்கள் நடந்துள்ள​தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை சில வாரங்களுக்கு முன் சொன்னேன். நீர்கூட அதைக் கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தீர். ராகவேந்திரராவ் என்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதையும் சொல்லி இருந்தேன். பொறுப்பேற்றது முதல் படு சுறுசுறுப்பாக இயங்கிவரும் அந்த அதிகாரி, ஜெ-வை ஏமாற்றி இதுவரை பல கோடிகளை சுருட்டியவர்களின் பட்டியலை ஆதாரபூர்வமாக கார்டனில் கொடுத்து விட்டாராம். கடந்தவாரம், சேனலில் முக்கியப் பொறுப்பில் இருந்த இரண்டு நபர்களிடம் வலுக்கட்டாயமாக ராஜினாமாக் கடிதங்கள் பெறப்பட்டு, தனி பங்களாவுக்கு வரச்சொல்லி உள்ளனர். சிக்கிய இருவரும் இதுவரை பலமாக இருந்தவர்கள்.  உள்ளே நடந்த ஸ்பெஷல் கவனிப்பில் வெலவெலத்துப்போய், 'அம்மாவுக்கு துரோகம் செஞ்சது உண்மைதான்’ என்று கதறியுள்ளனர். விரிவான விசாரணைக்குப் பின் நீட்டப்பட்ட வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, விட் டால் போதும் என்று தப்பித்து வந்தார்களாம்.''

''அப்படியா?''

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?

''டெல்லியில் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியே அந்த இரண்டு புள்ளிகளும் பல கோடிகளை ஆட்டையைப் போட்டார்களாம். ஒரு கட்டத்தில் 'சேனல் எப்போ தொடங்குவீங்க?’ என்று ஜெ. கேட்டபோது, வெறும் லோகோவை மட்டும் ரெடி செய்து தொடக்க விழா நடத்தி ஏமாற்றி உள்ளனர். மேலும், பட்ஜெட் படங்களை விற்கவரும் தயாரிப்பாளர்களிடம், அவர்கள் கேட்கும் தொகைக்கு ஓகே சொல்லிவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கும்போது, அதைவிட இரண்டு மடங்கு பில் போட்டும் சுருட்டி உள்ளனர். பினாமி பெயரில் விளம்பர நிறுவனம் ஆரம்பித்து கமிஷன் கொள்ளை அடித்த கதையும் நடந்துள்ளது. இப்படிப் பல வழிகளில் 500 கோடிக்கும் மேல் சுருட்டியதுடன், சேனலைக் குழி தோண்டிப் புதைக்கும் காரியங்களிலும் அந்த இரண்டு ஆசாமிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததைக் கேள்விப்பட்டாராம் ஜெயலலிதா!''

''இன்னும் எத்தனை களைகள் இருக் கிறதோ?''

''நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா ஜூன் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், அம்பாள் சன்னதியில் சில நாட்களுக்கு முன் 'ருத்ரயாகம்’ நடத்தப்பட்டு இருப்பதை அறிந்து பக்தர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதுபற்றி கோயில் குருக்கள் ஒருவரிடம் கேட்டதற்கு, 'பாரம்பரியம் மிகுந்த நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் நடந்த பிறகு வழக்கமான பூஜைகளைத் தவிர யாகம் எதுவும் செய்வது இல்லை. கோயிலின் 508 வருடத் தேரோட்ட வரலாற்றில் இப்போதுதான் ஆனித் திருவிழா சமயத்தில் யாகம் நடத்தப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தாவுக்கு ஆதரவாக சிலர் இந்த யாகத்தை நடத்தி இருக்கிறார்கள். வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காகவும் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து வெற்றி பெறவும் இந்த யாகம் நடத்தப்பட்டு இருக்கிறது’ என்றார். நித்யானந்தாவுக்கு எதிராக போலீஸின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வரும் சூழலில் இப்படி ஒரு யாகம் நடத்தப்பட்டு இருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது!'' என்றபடி பறந்தார் கழுகார்!

படம்: வீ.நாகமணி

மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?
மிஸ்டர் கழுகு: கோபாலபுர கோபம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism