Published:Updated:

2014ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

விகடன் விமர்சனக்குழு
2014ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
2014ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
2014ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2014ஆம் ஆண்டுக்கான வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பிவைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வீர, தீர செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும், முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

வீர, தீரச்செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுள்ளவர்கள். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு இல்லை.

இதேபோல், சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருதும், ஆண்டுதோறும், குடியரசு தின விழாவின் போது முதல்-அமைச்சரால் வழங்கப்படுகிறது. இந்த விருது, மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே 20 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

தமிழகத்தைச்சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுள்ளவர்கள். (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப்பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப்பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில்). இந்த விருது, ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

##~~##
2014ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள அண்ணா பதக்கம் மற்றும் கபீர் புரஸ்கார் பதக்கம் ஆகிய இந்த பதக்கங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன், தொடர்புடைய மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக, அரசு முதன்மைச்செயலாளர், பொதுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு 15.12.2013க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
பதக்கம் பெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு, 26.01.2014 குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.