Published:Updated:

தேச நலனுக்காகவே காமன்வெல்த்தில் கலந்து கொள்கிறேன்: சல்மான் குர்ஷித்

தேச நலனுக்காகவே காமன்வெல்த்தில் கலந்து கொள்கிறேன்: சல்மான் குர்ஷித்
தேச நலனுக்காகவே காமன்வெல்த்தில் கலந்து கொள்கிறேன்: சல்மான் குர்ஷித்
தேச நலனுக்காகவே காமன்வெல்த்தில் கலந்து கொள்கிறேன்: சல்மான் குர்ஷித்

கொழும்பு: தேசிய நலனுக்காகவே இந்தியாவின் பிரதிநிதியாக காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்கிறேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை  சல்மான் குர்ஷித் நேற்று கொழும்பு சென்றார்.

விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், "ஈழத்தமிழர் பிரச்னைகள் உள்பட பல்வேறு பிரச்னைகளை இலங்கையுடன் பேச வேண்டி உள்ளது. தேசநலனைக் கருதித்தான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

இங்கு நடைபெறுவது இரு தரப்பு மாநாடு அல்ல. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிற மாநாடு. இதில் பங்கேற்பது அத்தியாவசியமானது என்றுதான் வந்திருக்கிறேன். இந்த மாநாட்டின் இடையே, ஈழத்தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதுபற்றியும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கிறபோது எதிர்கொள்கிற தாக்குதல்கள் குறித்தும், இந்தியாவின் கருத்துக்களை, கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துச்சொல்கிற வாய்ப்பு கிடைக்கும்.

##~~##
காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்னை திகைப்பில் ஆழ்த்தியது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நலனுக்காக நாங்கள் எவ்வளவோ செய்கிறோம். போரினால் சின்னாபின்னமான பகுதிகளில் 15 ஆயிரம் வீடுகள் கட்டித்தருகிற மிகப்பெரிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாலைகள் போடுகிற திட்டங்கள், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துகிற திட்டங்களிலும் ஈடுபட்டு இருக்கிறோம்.
நாங்கள் இங்கு இல்லாவிட்டால், இந்த செயல்களை எப்படி செய்ய முடியும்? எனவேதான், இலங்கைக்கு நாங்கள் செல்லக்கூடாது என அவர்கள் சொல்வது கண்டு திகைக்கிறேன். எனது வேலை, தேசிய நலனையொட்டி இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்வதுதான்" என்றார்.