Published:Updated:

இலங்கை தாக்குதலை தடுக்க பிரதமரிடம் தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்!

இலங்கை தாக்குதலை தடுக்க பிரதமரிடம் தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்!
இலங்கை தாக்குதலை தடுக்க பிரதமரிடம் தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்!
இலங்கை தாக்குதலை தடுக்க பிரதமரிடம் தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்!

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமரை தமிழக, புதுச்சேரி மீனவ பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

இலங்கை சிறையில் தற்போது 81 தமிழக மீனவர்கள் உள்ளனர். மேலும் அவர்களின் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், தேசிய மீனவர் பேரவை செயலாளர் இளங்கோ தலைமையில் தமிழக, புதுச்சேரி மீனவ பிரதிநிதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, இலங்கை சிறையில் உள்ள 81 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

##~~##
மேலும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனை கேட்டுக் கொண்ட பிரதமர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக மீனவ பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.