Published:Updated:

ரூ.4.64 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கங்களை திறந்தார் ஜெயலலிதா!

ரூ.4.64 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கங்களை திறந்தார் ஜெயலலிதா!
ரூ.4.64 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கங்களை திறந்தார் ஜெயலலிதா!
ரூ.4.64 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கங்களை திறந்தார் ஜெயலலிதா!

சென்னை: திருச்சி உள்பட கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளத்தை முதல்வர் ஜெயலலலிதா திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், அண்ணா விளையாட்டரங்கில் 16 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான தளம், கண்ணாடி தடுப்பு சுவர், மின்னொளி அமைப்பு, குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டுள்ள உள்ளரங்க ஸ்குவாஷ் ஆடுகளம் ; திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 57 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னொளி வசதியுடன் கூடிய கூடைப்பந்து உள் விளையாட்டரங்கம்;

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2327.94 சதுர மீட்டர் பரப்பளவு  கொண்ட நீச்சல் குளம்; கரூர் மாவட்டத்தில் 1 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கால்பந்து, கபடி, கோ கோ ஆடுகளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி  கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம்; கடலூர் மாவட்டத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி; திண்டுக்கல் மாவட்டத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு  மாணவியர்களுக்கான  விடுதி என மொத்தம் 4 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், விடுதிகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா 11.11.2013 அன்று திறந்து வைத்தார்.

##~~##
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீச்சல் குளம் ; திருநெல்வேலி மாவட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான செயற்கை இழை ஓடுதளப் பாதை ; அரியலூர், நாமக்கல், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 55 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மாணவ, மாணவியருக்கான  விடுதிகள்; தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் என மொத்தம் 10 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு சார்ந்த  கட்டடங்களுக்கு முதலமைச்சர் 11.11.2013 அன்று அடிக்கல்  நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.