Published:Updated:

டீ விற்பவரெல்லாம் (மோடி) பிரதமர் ஆக முடியாது: சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை!

விகடன் விமர்சனக்குழு
டீ விற்பவரெல்லாம் (மோடி) பிரதமர் ஆக முடியாது: சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை!
டீ விற்பவரெல்லாம் (மோடி) பிரதமர் ஆக முடியாது: சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை!
டீ விற்பவரெல்லாம் (மோடி) பிரதமர் ஆக முடியாது: சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை!

லக்னோ: டீ விற்பவரெல்லாம், நாட்டின் பிரதமராக முடியாது என்று நரேந்திர மோடியை குறிவைத்து சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் பேசியது கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தாம் ஏழைகளை மனதில் வைத்து அவ்வாறு பேசவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்டோய் நகரில் நடைபெற்ற சமாஜ்வாதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளர் நரேஷ் அகர்வால்," நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர் ஆக விரும்புகிறார். டீ விற்பவரெல்லாம் இந்த நாட்டின் பிரதமர் ஆக முடியாது.(மோடி ரயிலில் டீ விற்று வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்). டீக்கடையிலிருந்து வருபவருக்கு ஒருபோதும் தேசிய நோக்கு இருக்காது. ஒரு கான்ஸ்டபிளை நீங்கள் போலீஸ் எஸ்.பி.யாக ஆக்கினால், அவருக்கு எஸ்.பி.-யின் அணுகுமுறை இருக்காது. அவர் தொடர்ந்து கான்ஸ்டபிளின் அணுகுமுறையையே கொண்டிருப்பார்" என்றார்.

நரேஷ் அகர்வாலின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பா.ஜனதா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடின உழைப்பை மேற்கொண்டால், யாரும் நாட்டின் உயர்நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு நரேந்திர மோடி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இதனை மற்றவர்களும் பின்பற்றினால், நாட்டிற்கு நலன் பயக்கும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் ஷிவானந்த் திவாரி கூறியுள்ளார்.

இதனிடையே அகர்வாலின் சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அகர்வாலின் பேச்சு ஏழைகளின் மனதை புண்படுத்தக் கூடியதாக உள்ளது எனக் கூறியுள்ள சமாஜ்வாதி எம்.பி.க்கள், நரேஷின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர உரிமை உண்டு இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

##~~##
இந்நிலையில் தாம் ஏழைகளை மனதில் வைத்து அவ்வாறு பேசவில்லை என்றும், இருப்பினும் தமது பேச்சு அவர்களது மனதை புண்படுத்தி இருந்தால் தாம் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஆனால் இந்த வருத்தம் மோடிக்கானது அல்ல என்றும் நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.