Published:Updated:

ராகுலிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்: சோனியாவுக்கு மோடி அட்வைஸ்!

விகடன் விமர்சனக்குழு
ராகுலிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்: சோனியாவுக்கு மோடி அட்வைஸ்!
ராகுலிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்: சோனியாவுக்கு மோடி அட்வைஸ்!
ராகுலிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்: சோனியாவுக்கு மோடி அட்வைஸ்!

பீமெட்டரா(சத்தீஸ்கர்) "மேடம் (சோனியா) நீங்கள் நோயாளியாக உள்ளீர்கள்...எனவே இளவரசர் (ராகுல்) கட்சி பொறுப்புக்கு வரட்டும். அவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலாவது சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறாரா? என பார்க்கலாம்" என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக அறிவுறுத்தி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பீமெட்டரா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியாவை 'மேடம்' என்றும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றும் கிண்டலாக குறிப்பிட்டார்.

"மேடம் நீங்கள் நோயாளியாகி விட்டீர்கள். இளவரசர் பொறுப்பை

ராகுலிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்: சோனியாவுக்கு மோடி அட்வைஸ்!

எடுத்துக்கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறாரா என்று பார்க்கலாம்" என மோடி கூறினார்.

வெங்காய விலை உயர்வு மற்றும் நாளொன்றுக்கு 27 ரூபாய்  சம்பாதித்தால் அவர் வறுமைக்கோடு வரம்புக்கு கீழ் வரமாட்டார் என திட்டக்கமிஷன் வரையறுத்ததை சாடிய மோடி, மக்களை பார்த்து, " 27 ரூபாய்க்கு நீங்கள் எவ்வளவு வெங்காயம் வாங்குவீர்கள்?... வெறும் 300 கிராம் வெங்காயம் மட்டுமே வாங்க முடியும். அப்படியானால் 300 கிராம் வெங்காயம் வாங்குபவர் மேடம் சோனியா சொல்கிறபடி பணக்காரரா?" என்று கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் பேசுகையில்,"இப்பொழுதெல்லாம் டெல்லியிலிருந்து பலர் வருகின்றனர். சத்தீஸ்கருக்கு நாங்கள் ஏராளமாக கொடுத்துள்ளோம் என்கிறார்கள்.ஆனால் இங்கே மக்கள் பிச்சை பாத்திரத்துடன் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

##~~##
நாங்கள் சத்தீஸ்கருக்கு பணம் கொடுத்தோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் அவர்களை கேட்கிறேன்..அந்த பணம் என்ன உங்கள் மாமா வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதா?
இதுமாதிரியான பேச்சு மக்களை அவமதிப்பதாகும். நீங்கள் முதலாளிகள் அல்ல, இதுபோன்ற அகங்காரமான எண்ணத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.