Published:Updated:

போலி குற்றவாளிகளை கைது செய்த வேலூர் டி.எஸ்.பி. இடமாற்றம்!

விகடன் விமர்சனக்குழு
 போலி குற்றவாளிகளை கைது செய்த வேலூர் டி.எஸ்.பி. இடமாற்றம்!
போலி குற்றவாளிகளை கைது செய்த வேலூர் டி.எஸ்.பி. இடமாற்றம்!
 போலி குற்றவாளிகளை கைது செய்த வேலூர் டி.எஸ்.பி. இடமாற்றம்!

வேலூர்: வேலூர் பா.ஜ.க. மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூரை சேர்ந்த பா.ஜ.க. மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி மற்றும் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அரவிந்த் ரெட்டியை கொலை செய்ததாக, கூலிப்படையைச் சேர்ந்த வசூர்ராஜா, தங்கராஜ், பிச்சைபெருமாள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

##~~##
இந்நிலையில், தீவிரவாதிகள் பிலால்மாலிக், போலீஸ்பக்ருதீன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடத்திய விசாரணையில் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது தீவிரவாதிகள் என தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் கைதான கூலிப்படையினர் போலி குற்றவாளிகள் என்பது உறுதியானது.
இதையடுத்து, போலி குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தெற்கு மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கூலிப்படையினரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.