Published:Updated:

காங். எம்.எல்.ஏ. விஜயதாரணியை தரக்குறைவாக திட்டிய வாலிபர் மீது புகார்!

காங். எம்.எல்.ஏ. விஜயதாரணியை தரக்குறைவாக திட்டிய வாலிபர் மீது புகார்!
காங். எம்.எல்.ஏ. விஜயதாரணியை தரக்குறைவாக திட்டிய வாலிபர் மீது புகார்!
காங். எம்.எல்.ஏ. விஜயதாரணியை தரக்குறைவாக திட்டிய வாலிபர் மீது புகார்!

சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்மை தரக்குறைவாக பேசிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டெலிபோன் மூலம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

நேரடி ஒளிபரப்பின் போது எம்.எல்.ஏ. விஜய தாரணியிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை தரக்குறைவான ஆபாசமான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது.

இதையடுத்து விஜயதாரணி எம்.எல்.ஏ. வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தார்.நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவன அலுவலகம் ராயபுரத்தில் உள்ளது. இதையடுத்து ராயபுரம் போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

##~~##
சம்பந்தப்பட்ட தொலை பேசி எண்ணை வைத்து பேசி மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். பேசியவர் யார் என்று அடையாளம் தெரிந்து விட்டது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.