Published:Updated:

தலையங்கம் - புண்ணான 'கை'யும்... பார்க்காத கண்ணும்!

தலையங்கம் - புண்ணான 'கை'யும்... பார்க்காத கண்ணும்!

பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம் - புண்ணான 'கை'யும்... பார்க்காத கண்ணும்!
தலையங்கம் - புண்ணான 'கை'யும்... பார்க்காத கண்ணும்!

கைப் புண்ணைப் பார்க்கக் கண்ணாடி தேவை இல்லைதான்! ஆனால், புண் தரும் வலியை உணராமல், அதைக் கண்கொண்டு பார்க்கவும் மனம் இல்லாதோர் மருந்து போட்டுக் காயத்தை ஆற்ற எப்படி முன்வருவார்கள்?

அதனால்தான், புகழ்பெற்ற சர்வதேசப் பத்திரிகையான 'டைம்' நம் பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள்பற்றி வெளியிட்டிருக்கும் கவலைக்குரிய கருத்துகளை 'கை'க்காரர்கள் அடியோடு மறுத்துப் புறந்தள்ளப்பார்க்கிறார்கள்.

'சுதந்திரமாகச் செயல்பட முடியாதவர், பின்னால் இருந்து இயக்கப்படுபவர், ஊழல் அமைச்சர்களைத் தட்டிக்கேட்கும் தைரியம் இல்லாதவர்' என்றெல்லாம் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்துள்ள 'டைம்', பதவியில் அமர்ந்த இந்த எட்டு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் விஷயத்தில் அவர் எதையுமே சாதிக்கவில்லை என்கிறது.

ஏற்கெனவே தோளில் இருக்கும் எடையைச் சுமக்கத் திராணி இல்லாமல் திணறும்போது, தன்னை இயக்கும் தலைவி சொல்லிவிட்டார் என்பதற்காக மத்திய நிதி அமைச்சர் பொறுப்பையும் சேர்த்துச் சுமக்க ரொம்பதான் தைரியம் வேண்டும் மன்மோகனுக்கு.

பதவிக்காகத் தீராப் பழி சுமக்க நேர்ந்தாலும், ரோஷம்கொண்டு  பொங்கி எழாத மன்மோகனை நொந்துகொள்வதா... அல்லது கையைக் காலைக் கட்டிப் போட்டுவிட்டு, 'குஸ்தியில் ஜெயித்துக் காட்டு' என்று இவரைக் களம் இறக்கிய சோனியாவைக் குற்றம் சொல்வதா... அல்லது காலைச் சுற்றிய பாம்பாக மத்திய அரசை வளைத்து, தப்பித் தவறியும் உருப்படியான திசை நோக்கி நகராமல் தடுக்கும் கூட்டணிக் கட்சிகளைக் கண்டு கோபப்படுவதா... அல்லது 'நமக்கு விதித்தது அவ்வளவுதான்' என்று வெறுத்துப்போய் முடங்கிவிட்ட நம் தேசத்து மக்களை எண்ணிப் பரிதாபம்கொள்வதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு