Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பி.சூடாமணி, திருச்சி-6.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர், தேவைஇல்லாத குற்றச்சாட்டுக்களை அடுத்தவர் மீது சுமத்துவது சரியா?

பிரணாப் மீது சங்மா வைத்தது தேவைஇல்லாத குற்றச்சாட்டு அல்ல. கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரணாப் அளித்த கடிதத்தில் இடம்பெற்ற கையெழுத்து சரியானதா... அவருடையதுதானா என்று எழுப்பிய கேள்வி அவசியமானதே. இதேபோல் ரவீந்திர பாரதி சங்கத்தின் தலைவர், பீர்பும் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியை பிரணாப் வகிக்கலாமா என்று கேட்டதும் முறையானதுதான்.

கழுகார் பதில்கள்!

சங்மா எழுப்பியது சந்தேகங் கள்தான். சந்தேகத்துக்கு இடமில்லாத மனிதர் இந்தியக் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்ற ஆதங்கம் தான் இதனுடைய அடிப்படை. இத்தகைய கேள்வியே எழுப்பக்கூடாது என்பது தவறு.

 பாரதி முருகன், மணலூர்பேட்டை.

கழுகார் பதில்கள்!

ஆன்மிகவாதிகள் அரசியலுக்கு வருவது நல்லதா? அரசியல்வாதிகள் ஆன்மிகத்துக்கு வருவது நல்லதா?

##~##

இரண்டுமே நாட்டுக்கு நல்லதல்ல. ஆன்மிக வாதிகள் அரசியலுக்கு வந்தால், அவர்கள் பெயர் கெடும். அரசியல்வாதி ஆன்மிகத்துக்குச் சென்றால், ஆன்மிகத்தின் பெயர் கெடும்!

 விஜி.சத்திய நாராயணன், நங்கநல்லூர்.

கழுகார் பதில்கள்!

நேர்மையாகச் செயல்பட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாலாஜி, பழி வாங்கப்பட்டு இருக்கிறார். இதைப்பார்த்து யாராவது இனி நேர்மையாக செயல்பட முன்வருவார்களா?

'ஒரு நேர்மையான மனிதனின் வாக்கை வாங்கும் அளவுக்கு இந்த உலகம் பணம் படைத்ததல்ல’ என்றான் முதலாம் கிரிகோரி. இத்தகைய விலைக்கு வாங்கப்படாத மனிதர்கள்  எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள், இத்தகைய அடக்குமுறையை வரவேற்கும் மனநிலையுடன்தான் நேர்மையாக இருக்கிறார்கள்.

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

'அ.தி.மு.க-வின் பொழுதுபோக்கு, பொய் வழக்குப் போடுவது’ என்கிறாரே பேராசிரியர் அன்பழகன்?

சில தி.மு.க-வினரின் பொழுதுபோக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அடித்துப் பறிப்பதாய் இருந்தது என்பதை அன்பழகன் அறிவாரா?

மதுரையிலும் சேலத்திலும் நடந்த செயல்பாடுகளை நியாயப்படுத்தி அன்பழகனால் பேச முடியுமா?

 எஸ்.புருஷோத்தம் ராஜன், பரமக்குடி.

கழுகார் பதில்கள்!

நித்தியானந்தா சினிமாவுக்கு வந்தால் ஹீரோவா? வில்லனா?

ஏன் காமெடியை மட்டும் விட்டு விட்டீர்கள்? அதுவும் அவர்தான்!

 மு.சுகுமார், மதுரை.

கழுகார் பதில்கள்!

'காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியினரான நாமே மறந்துவிட்டோமே’ என்று வருத்தப்பட்டுள்ளாரே குமரிஅனந்தன்?

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கொள்கை வழியில்தானே காங்கிரஸ்காரர்கள் நடக்கிறார்கள். பிறகு ஏன் குமரியார் வருந்த வேண்டும்?

அவர் சொல்வது மகாத்மா காந்தி என்றால்... காந்தி இருந்த காலத்திலேயே காங்கிரஸ் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. பெரும்பாலான கருத்துக்களை, 'நான் காங்கிரஸ் பிரதிநிதியாகச் சொல்லவில்லை. எனது தனிப்பட்ட ஆத்மாவின் குரல்’ என்றுதான் காந்தி சொன்னார். 'சுதந்திரம் என்ற லட்சியத்தை அடைந்தாகி விட்டது. எனவே, கட்சியைக் கலைத்து விடுங்கள்’ என்று சொன்னவர் அவர். அப்படிப்பட்டவரை எப்படி நினைப் பார்கள்?

 அ.விநாயகமூர்த்தி, சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

திராவிட இயக்கத்தைப் போல காங்கிரஸ்காரர்களுக்கு பத்திரிகைகள் உண்டா?

கழுகார் பதில்கள்!

காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்த 1967-ல் ஈ.வெ.கி.சம்பத்தை கௌரவ ஆசிரியராகக்கொண்டு 'நவசக்தி’ வந்தது. இதில்தான் கண்ணதாசன் தொடர்ந்து எழுதினார். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு 'ஜெயபேரிகை’ வந்தது. 'நாத்திகம்’ நடத்தினார் பி.ராமசாமி. இவை படிப்படியாகக் குறைந்து விட்டன. இப்போது, 'தேசிய முரசு’ மட்டுமே அந்த இயக்கத்தைத் தாங்கி நிற்கிறது!

 எஸ்.குணசேகர், திருமயம்.

கழுகார் பதில்கள்!

மன்மோகன் பற்றி 'டைம்’ எழுதியதைப் படித்தீரா?

இந்தியாவுக்கு 'பேட் டைம்’ என்பது நமக்குத் தெரியாதா? அமெரிக்க 'டைம்’ படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?

கழுகார் பதில்கள்!

ஆர்.அஜிதா, கம்பம்.

கழுகார் பதில்கள்!

'சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக அரங்குகளில் இனி, திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது’ என்று உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளதே அரசு?

முதல்வரை மகிழ்வித்துக் காக்கா பிடிப்பதற்காகவே செய்தித்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்த வேலைதான் அந்தத் திருமண வரவேற்பு அனுமதி. விஷயம் விவகாரம் ஆனதும், பி.ஆர்.ஓ. ஒருவர் மீது பழியைப் போட்டு அவரை சஸ்பெண்ட் செய்தனர். முதல்வர் நடத்தி வைத்த இலவசத் திருமணத்தில் ஏற்கெனவே திருமணம் ஆன இரண்டு ஜோடிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதற்கு காரணமானவர்கள் என்று சொல்லி  இந்துசமய அறநிலையத் துறையின் உயர் அதிகாரியில் இருந்து அடிமட்ட ஊழியர் வரைக்கும் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.  அங்கு நடந்த அந்தத்  தவறுக்கு அதன் உயர் அதிகாரி காரணம் என்று நடவடிக்கை எடுத்தது முறைதான் என்றால், இதற்கு மட்டும் இந்தத் துறை உயர் அதிகாரி பொறுப்பாக மாட்டாரா? என்ன அபத்தம் இது!

கழுகார் பதில்கள்!