Published:Updated:

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...
##~##

''ஆதீனம் பற்றி ஆரம்பிப்போமா?'' - உள்ளே வந்தார் கழுகார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''.....கலாமே...'' என்றதும் சின்னதாகச் சிரித்தார்  கழுகார்.

''மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்தியானந்தா எந்த நேரமும் நீக்கப்படலாம் என்பதே 'ஷாக்’ செய்தி. நித்தியை இளைய ஆதீனமாக நியமித்தபோது 18 ஆதீனகர்த்​தர்கள் அதனை எதிர்த்தார்கள். அப்போது அந்த ஆதீனங்கள் மீது கடும்கோபத்தில் இருந்த மதுரை ஆதீனம், இப்போது மனமாற்றம் அடைந்துள்ளார். தொடர் அவமதிப்பு காரணமாகவே இந்த முடிவுக்கு அவர் வந்ததாகச் சொல்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன், மதுரை மடத்தில் இருந்து கொடைக்கானலுக்குச் சென் றார் நித்தியானந்தா. அவர் போனதும், கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆதரவாளர்களும் மதுரையில் இருந்து கிளம்பி விட்டார்கள். இப்போது மதுரை ஆதீனத்தில் 15 பேர்தான் இருக்கிறார்கள். இந்தப் பணியாளர்களில் அருண கிரிக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் சொன்னதை, நான் உமக்கு அப்படியே சொல்கிறேன்.''

''சொல்லும்!''

''ம்..., 'சந்நிதானம் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார். அவர் தினசரி, வாரப் பத்திரிகைகளைத் தவறாமல் படிப்பார். தினமும் நான்கு முறை டி.வி-யில் செய்திகள் பார்ப்பார். அதில் வரும் தகவல்களை ஆரம்பத்தில் நித்திக்கு எதிரான சதி என்று சொல்லி வந்தவர், இப்போது உண்மை இல்லாமல் இவ்வளவு தூரம் செய்தி போட மாட்டார்களே என்று வருத்தத்தில் இருக்கிறார். அப்பாவிப் பக்தர்களை ஏமாற்றியதுபோல என்னையும் ஏமாற்றி விட்டார் நித்தியானந்தா. ஆரம்பத்தில், என்னை ஒரு கடவுள்போல் மதித்தார். அவர் வைத்திருந்ததைப் போன்ற எண்டேவர் கார் ஒன்றை எனக்கு வழங்கினார். அவருடைய சிம்மாசனத்தை விட சற்று உயரமான சிம்மாசனத்தை எனக்குப் பரிசளித்தார். பேட்டிகளில் என்னையும் அருகில் உட்கார வைத்து அழகு பார்த்தார். ஆனால், அவரது சீடர்கள் என்னை மதிப்பதே இல்லை. என்னைக் காண வருபவர்கள், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது மரபு. ஆனால், நித்தி பக்தர்கள் என்னை மதிக்காதது மட்டுமல்ல, கேலியும் செய்கிறார்கள்’ என்கிறாராம் ஆதீனம்.

'நித்திக்கு நெருக்கமான ஒருவர் மதுரை ஆதீனத்தை 'அபோகலிப்டா’ என்று கேலி செய்தார். ஆதிவாசி என்று தான் கிண்டல் செய்யப்பட்டது தெரிந்தபோது ரொம்ப நொந்துபோனார் மனிதர். நித்தியானந்தா கொடைக்கானல் சென்ற பிறகும்கூட, இங்கே இருக்கும் சிலர் அவரைச் சுதந்திரமாகச் செயல்பட​விடவில்லை. 'ஆதீனத்தைப் பார்க்கணும்’ என்று வரும் பக்தர்களிடம், 'அவர் கொடைக்கானல் போயிருக்கிறார்’ என்கிறார்களாம். 'பெரியவரைப் பார்க்கணும்’ என்று மீண்டும் சொன்னால், 'அப்படிச் சொல்லுங்க. ஆதீனம்னா அது நித்தியானந்தாதான்’ என்கிறார்களாம். ஆதீனத்தைச் சந்திக்க யார் வந்

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...

தாலும், நித்தியின் ஆதரவாளர்கள் யாராவது பக் கத்தில் வந்து நின்றுகொள்கிறார்கள். சுதந்திரமாகப் பேச முடியாது. இங்கு நடக்கும் தகவல்களை நித் தியிடம் உடனுக்குடன் சொல்லி விடுவதால், அவர் சுவாமியைத் தொடர்புகொண்டு அதிரடியாகக் கேள்விகள் கேட்கிறார். இதெல்லாம் சந்நிதானத்துக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்கிறார் அவர். அதனால்தான், '40 வருட வரலாற்றில் என்னை யாரும் ஓவர்டேக் செய்ததும் இல்லை... செய்ய அனுமதித்ததும் இல்லை’ என்று மதுரை ஆதீனம் பேட்டி கொடுத்தார்!''

''அப்போ ஆட்டம் ஆரம்பமா?''

''மதுரை ஆதீனம் இன்னும் கோபமாகச் சொன்​னதாக சில வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. 'இளைய ஆதீனம், ஆதீனத்தைக் கட்டுப்படுத்துவது சரியாக வராது. என்னைப் பற்றி நித்திக்குத் தெரியாது. ரொம்பவும் நெருக்கடி கொடுத்தால், அவரை மடத்தைவிட்டே விரட்டிவிடுவேன். என்னுடைய முடிவுக்கு வலு சேர்க்கும் விதமாக சில கோர்ட் உத்தரவுகளை எதிர்பார்க்கிறேன்’ என்று  சொன்னாராம். 'நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்​கிறோம்’ என்று அந்த ஊழியர் சொன்னார்!''

''கிளைமாக்ஸை நெருங்குகிறதோ நட்பு?''

''ஆதீனத்தைத் தொடர்புகொண்டு ஒரு நிருபர் பேசினாராம். 'நித்தியானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். நேரம் வரும்போது நானே பேசுகிறேன்’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டாராம். 'அவர் சொன்ன வேகத்தைப் பார்த்தால், முடிவு நெருங்கி விட்டது’ என்றே சொல்ல வேண்டும்!'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்!

''இந்து சமய அறநிலையத் துறையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் நடத்திவைத்த 1,006 இலவசத் திருமணங்களில் இரண்டு ஜோடிகள் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள். இது தெரிய வந்ததும், 'சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆனால், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சந்திரக்​குமார் ஐ.ஏ.எஸ். ஆரம்பித்து, இணை ஆணையர் வாசுதேவன், உதவி ஆணையர் சிவகுமார், துணை கமிஷனர் வான்மதி (பார்த்தசாரதி கோயில்), செயல் அலுவலர் அறவாழி (காரணீஸ்வரர் கோயில்), சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், சைதாப்பேட்டை வி.ஏ.ஓ. என்று சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆணையர் சந்திரக்குமார் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு உள்ளார். மற்றவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்கள்!''

''உண்மையில் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டி​யவர்கள் யார்?''

''மொத்தம் 15 நாட்கள் அவகாசத்தில் 1,006 ஜோடிகளைத் திரட்டுவது அறநிலையத் துறை அதிகாரிகளுக்குச் சிக்கலாக இருந்தது. அனைத்துக் கோயில்களிலும் எழுதிப் போட்டார்கள். அதைப் பார்த்து வந்த ஜோடிகள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் குறிப்பிட்ட வி.ஏ.ஓ-வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் நேரில் போய் பார்த்து சரியானதுதான் என்று சொன்ன பிறகு அதை அறநிலையத் துறை அதிகாரிகள் ஏற்றுக்​கொண்டார்கள். இந்த இரண்டு ஜோடிகளுக்கும் இதுதான் முதல் திருமணம் என்று சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டரும், வி.ஏ.ஓ-வும் சான்றிதழ் கொடுத்தார்கள். அதை துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அறநிலையத் துறை உயர் அதிகாரியை பழிவாங்கி விட்டதாக கோட்டை பொருமுகிறது!''

''அப்படியா?''

''இந்தக் கல்யாண விழா ஆரம்பத்தில் இருந்தே கலாட்டாவாகத்தான் இருந்தது. 'இந்தத் திருமணத்தை நடத்தும் மொத்தச்செலவும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலைச் சார்ந்தது. அதன்படி பார்த்தால், அறநிலையத் துறைக்குக் கூட முழுப்பொறுப்பு என்று சொல்ல முடியாது. இப்படி இருக்க செய்தித்துறை செயலாளராகவும் அறநிலையத் துறை செயலாளராகவும் இருக்கும் ராஜாராம் ஐ.ஏ.எஸ்-தான் அனைத்து விஷயங்களையும் கண்காணித்தார். முதல்வரிடம், 'நான்தான் இவை அனைத் தையும் நடத்துகிறேன்’ என்று காட்டிக்கொண்டார். 'இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வரை நட​வடிக்கை எடுத்தவர்கள்... அந்த அதிகாரியை மட்டும் விட் டது ஏன்?’ என்று கோட்டை ஊழியர்கள் கொந்தளிப்புடன் கேட்கிறார்கள்.

'இலவசமாய் கிடைக்கும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அந்த ஜோடிகள் பொய் சொல்லி இந்த திட்டத்துக்குள் சேர்ந்து​விட்டார்கள். குப்பை சேகரித்து வாழ்க்கையை நடத்து​பவர்கள் ஒரு ஜோடி. இன்னொரு ஜோடி, கலப்புத் திருமணம் செய்து​கொண்டவர்கள். முதல்வர் நடத்தி​வைத்த திருமணம் என்பதால் தொந்தரவு எதுவும் இருக்காது என்பதற்க​£கத் திருமணம் செய்து​கொண்டார்கள். இரண்டுமே மன்னிக்கக்கூடிய தவறுகள்தான். ஆனால், இதற்காக  இந்து சமய அறநிலையத் துறையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஒரு நடவடிக்கை தேவையா?’ என்பது​தான் ஊழியர்களின் கோபம்!''

''என்ன காரணமாம்?''

''சந்திரக்குமாரை சஸ்பெண்ட் செய்யக்கூடிய அளவுக்கு முதலில் ஃபைல் தயார் ஆனதாம். ஆனால் அதை முதல்வர் மறுத்தாராம். அதன்பிறகுதான் கட்டாயக் காத்திருப்பு போதும் என்றாராம். அறநிலையத் துறை அமைச்சரை அரசு ஊழியர்கள் போய்க் கேட்ட போது 'அப்ப​டியா இந்த விஷயமே எனக்குத் தெரியாதே’ என்றாராம். 'கோடிக்​கணக்கான சொத்துக்கள் உள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சுத்தப்படுத்த சந்திரக்குமார் ஐ.ஏ.எஸ். எடுத்த நடவடிக்கைகள் பிடிக்காத சில உயர் அதிகாரிகள் சேர்ந்து இந்தக் காரியங்​களைப் பார்த்து விட்டார்கள்’ என்கிறது கோட்டை வட்டாரம். முதல்வர்தான் முழு விசாரணையை நடத்த வேண்டும். 'முதல்வரைக் குஷிப்படுத்துவதற்காக சில காரியங்களைப் பார்ப்​பவர்கள் பின்னணியில் பல்வேறு கோல்மால் வேலைகளைச் சத்தம் இல்லாமல் செய்​கிறார்கள்’ என்பதும் அரசு ஊழியர் சங் கங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது!''

''அடுத்து சொல்லும்!''

''கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து சிறிது தூரத்தில் கொடநாடு வியூ பாயின்ட் இருக்கிறது. அதன் அருகே ஒரு ஏ.டி.எம். கட்டப்பட்டு உள்ளது. 'பேங்க் ஆஃப் இண்டியா’ வங்கி சார்பாக நிறுவப்படும் இந்த ஏ.டி.எம்-மை முதல்வர் தன் கையால் திறந்து வைக்க முடிவு செய்து உள்ளார். அரசு நிகழ்ச்சியாக நடத்தும் யோசனையில் இருக்கும் இந்த விழாவில் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலருக்கு நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்க இருக்கிறார். எந்தத் தேதியில் இந்த விழாவை நடத்தலாம் என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லையாம்!''

''முதல்வர் எப்போது மலையைவிட்டு இறங்குகிறார்?''

''இன்றைய நிலவரப்படி அனேகமாக 18-ம் தேதி காலை அல்லது அதற்கு முந்தைய நாள் சென்னை திரும்பலாம். 18-ம் தேதி மாலையில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கிறது. அதில் பங்கேற்கலாம்!''

''மறுபடியும் கொடநாடு செல்வாரா?''

''இப்போதுவரை அது முடிவாகவில்லை! முதல்வரின் பெர்சனல் உதவியாளரான பூங்குன்றன் சில நாட்களுக்கு முன் ஒன்டே டிரிப்​பாக சென்னை வந்து விட்டு,  கொடநாடு திரும்பி விட்டாராம். பூங்குன்றனின் பெர்சனல் டிரிப் என்று சொல்லப்பட்டாலும் கூட, பிறரிடம் கொடுத்து அனுப்ப முடியாத சில ஃபைல்களை பூங்குன்றன் மூலம் முதல்வர் கொடுத்து அனுப்பினார் என்றும், சென்னை வந்த பூங்குன்றன், அரசு ரீதியாக சில முக்கிய விஷயங்களை முதல்வர் சார்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.''

''ம்!''

''அதை யாரோ மந்திரி சபை மாற்றத்துக்கான ஃபைல் என்று கிளப்ப... பைல்ஸ் வராத குறையாகத் துடிக்​கிறார்கள் அமைச்சர்கள்!'' என்றபடி பறந்தார் கழுகார்!

 அழையுங்கள் என்று சொன்ன தலித் தலைவர்!

'பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரத் தயார். ஆனால் நீங்கள் வந்து என்னிடம் வெளிப்படையாக கோரிக்கை வையுங்கள்’ என்று தலித் தலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் சொன்னாராம். 'தேடிப் போய் ஆதரவு கேட்டால் கருணாநிதி கோபித்துக் கொள்வாரே’ என்று தயங்கினாராம் தேசிகன்!

 24...? 25...?

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...

நமது எம்.ஜி.ஆர். தொடங்கி 24 ஆண்டுகள் ஆனதா? அல்லது 25 ஆண்டுகள் ஆனதா? என்று குழப்பம் அவர்களுக்கே இருந்ததுபோலும்.

'24-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் எனக்குத் துணையாக இருந்து வருகிறது’ என்று முதல்நாள் வாழ்த்து சொல்லி இருந்தார் ஜெயலலிதா. மறுநாள்தான் இது வெள்ளிவிழா ஆண்டு என்று யாரோ கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். மறுநாளும் அதையே தலைப்புச்செய்தியாக வெளியிட்டு வெள்ளிவிழா வாழ்த்துச் சொல்லி இருந்தார் ஜெயலலிதா. இந்த குளறுபடிக்கு காரணமானவர்களைத் திட்டித் தீர்த்து விட்டாராம் ஜெயலலிதா.

 சங்மாவுக்காகப் பேசிய ராம்ஜெத்மலானி!

ம.தி.மு.க.வின் ஆதரவை சங்மாவுக்கு வழங்கி இருக்கிறார் வைகோ. சங்மாவுக்கு வாக்களியுங்கள் என்று அவரிடம் பேசியது பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி. 'நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என்னால் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்க முடியாது. உங்களது கோரிக்கைப்படி சங்மாவுக்கு வாக்களிப்போம்’ என்று அவரிடம் சொன்னாராம் வைகோ!

 அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர்.?

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொந்த ஊரான திருத்தங்கல்லில் அரசு அனுமதி பெற்று கேபிள் நடத்தி வருபவர் மீனா. இவருக்குப் போட்டியாக அமைச்சரின் ஆதரவாளரும், திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவருமான சக்தியும் அதே பகுதியில் அனுமதி இல்லாமல் கேபிள் டி.வி. தொடங்கவே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திலகர் என்ற வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

'அரசு அனுமதி பெறாமல் கேபிள் டி.வி. நடத்தும் சக்தி, அரசு அனுமதி பெற்ற மற்றவர்களின் வயர்களை வெட்டித் துண்டிப்பது, பூஸ்டர்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். திருத்தங்கல் போலீஸில் புகார் செய்தோம். நடவடிக்கை இல்லை. இதற்கிடையே, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சக்தி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த கருப்பு, புலிப்பாண்டி உள்ளிட்ட சிலர் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். மேலும், 'அமைச்சரின் உதவியுடன் பொய்வழக்குப் பதிவு செய்து உங்களை சிறையில் அடைப்போம்' என்றும் மிரட்டினார்கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், 'மனுதாரர் கொடுத்துள்ள புகாரை விருதுநகர் மாவட்ட எஸ்.பி., திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். எஃப்.ஐ.ஆர். போடுவதா, வேண்டாமா என்று காவல்துறை கிறுகிறுப்பில் இருக்கிறது.

மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...
மிஸ்டர் கழுகு: 'கேலி' நித்தி... 'ஆத்திர' அருணகிரி...