Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

பரமு.கண்ணப்பன், காங்கேயம்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  புதிய அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் எப்படி...?

கழுகார் பதில்கள்!

  அவரைப் பற்றி இப்போதே சொல்ல என்ன இருக்கிறது? செங்கோட்டையனிடமே பவ்யமாகப் பேசக்கூடியவர் தோப்பு. சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பார் கள். வெங்கடாசலத்துக்கு கோட்டையை உடைத்துக் கொண்டு வந்துள்ளது. வருவாய்த்துறை, அதிகாரம் உள்ள அளவுக்கு ஆபத்தானதும். இதற்கு முந்தைய காலங்களில், இடையில் வில்லங்கம் வராமல் பார்த்துக் கொண்டது நாஞ்சில் மனோகரன் (1996-2000) மட்டும்தான். மற்றபடி பதவி 'பத்திரம்’ கிடையாது.

 ஆ.செங்கோடன், கோவை.

கழுகார் பதில்கள்!

  பிரணாபை விட சங்மாதானே தகுதியான நபர்?

##~##

  இரண்டு பேருமே இரண்டு கட்சிகளின் பிரதி

நிதிகள். மாறாக, தத்துவங்களின் பிரதிநிதியாக நிறுத்தப் பட்டால் மட்டுமே ஒருவரை தகுதியானவராகச் சொல்ல முடியும்.

தியாகம் மற்றும் தொண்டின் பிரதிநிதி - பாபு ராஜேந்திர பிரசாத். அறிவு மற்றும் தர்க்கத்தின் பிரதிநிதி - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

இப்போதோ... வேட்பாளர்களை முன்னிறுத்தியவர் களில் ஒருவர் 'ஸ்பெக்ட்ரம்’, இன்னொருவர் 'பெங்களூரு’! இதில் எந்தத் தகுதியைச் சொல்கி றீர்களோ..!

 மு.சுரேந்தர், திருப்பூர்.

கழுகார் பதில்கள்!

  'தமிழ் ஈழக் கோரிக்கை இப்போதைக்கு இல்லை’ என்கிறாரே கருணாநிதி?

  'எப்போதைக்கும் இல்லை’ என்றுதான் என் காதுக்கு விழுந்தது. 'என் வாழ்க்கையின் இறுதி லட்சி யம் தமிழீழம்’ என்று இரண்டு வாரங்களுக்கு முன் பேசியதற்குள் இப்படி ஒரு பல்டி என்றால்... அது எந்த நெஞ்சுக்கும் அநீதி!

 முருகேசன், திருவள்ளூர்.

கழுகார் பதில்கள்!

  தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ.வைக் கைது செய்திருப்பது பழி வாங்கும் நடவடிக்கையா?

  அப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. திருவள்ளூர் நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சேலம் தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ. மோகன்ராஜ் மீதும் ஒரு புகார் இருக்கிறது. காவல் நிலையத்துக்கே போய் ஒரு கைதியை விடுவிக்கப் புகுந்தவர் மேட்டூர் எம்.எல்.ஏ.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது தி.மு.க., அ.தி.மு.க-வுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல தே.மு. தி.க-வினர் என்பது தெளிவாகவே தெரிகிறது!

 வசந்தகுமார், கோவில்பட்டி.

கழுகார் பதில்கள்!

  அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்ற மத்திய அரசின் திட்டம் நடைமுறைச் சாத்தியம் ஆகுமா?

மாநில அரசாங்கம் மனது வைத்தால் முடியும்.  பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பிள்ளைகளுக்கு அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிறது மத்திய அரசின் சட்டம். இதை, தமிழ் நாட்டின் எத்தனை தனியார் பள்ளிகள் ஒழுங் காகக் கடைப்பிடித்தன என்ற புள்ளி விவரத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை முதலில் எடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கர்நாடகாவில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஸ்டிரைக் செய்த கொடுமையும் நடந்தது.

ஆனால் ஒன்று... கல்வியை தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, சட்டம் மட்டும் போடுவதால் பயன் இல்லை. அரசு வழங்கும் சலுகைகளை எதிர்பார்த்து நிற்கும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தாத வரையில் இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் கனவாகவேதான் இருக்கும்.

 முகில், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்!

  போர் இல்லாத உலகம் சாத்தியமா?

  மகாபாரதப் போர் குறித்து 500 பக்கங்களுக்கு மேல் எழுதிய நா.பார்த்தசாரதி, இப்படித்தான் ஆரம்பிக்கிறார். 'உலகம் என்ற ஒன்று தோன்றிய நாளில் இருந்து அறம், மறம் என்னும் இரண்டு மாறுபட்ட பேருணர்ச்சிகளும் தோன்றிப் போராடித் தான் வருகின்றன. காலந்தோறும், வாழ்க்கை தோறும் மனித சமுதாயத்தின் உயர்நிலை - தாழ்நிலை ஆகிய நிலைகள் தோறும் தர்ம, அதர்ம யுத்தம் என்கிற இந்தச் சத்திய, அசத்தியப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நாகரிக வளர்ச்சியோ இதயப் பண்பாடோ அல்லது சமூக முன்னேற்றமோ... எந்த ஒரு புதுமையின் முயற்சியாலும் உலகின் அழியாப் போராகிய இந்தப் போரை நிறுத்தவே முடியவில்லை. மண்ணையும் விண்ணையுங் கொண்டு வாழும் உயிரினங்கள் உள்ளவரை, இந்தப் போரும் நித்தியமாக நிலைத்து நின்று நிகழும் என்பதை மறுக்க முடியாது’ என்கிறார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் என்பது வெறுமனே நாடுகளின் பெயர்கள் மட்டுமல்ல. தர்மம் - அதர்மம் என்று வார்த்தைகளின் பிரதிபலிப்புகள். இதன் எதிரொலியே போர்கள். அவை நடக்காமல் இருக்க சாத்தியமான ஒரு பாதை இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகுதானே... அந்தப் பாதையில் பயணிப்ப தெல்லாம்..!

செ.முகேஷ், பெங்களூரு.

கழுகார் பதில்கள்!

அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் திருந்த வேண்டும் என்று ஜெயலலிதா எச்சரிக்கை விடுப்பது வரவேற்க வேண்டியதுதானே?

  முதலில் 'கவுன்சிலர்கள் திருந்த வேண்டும்' என்றார். இப்போது 'அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் திருந்த வேண்டும்' என்கிறார். திருந்தா தவர்களை என்ன செய்யப் போகிறார் என்பதை வைத்தே வரவேற்பதா, வேண்டாமா எனச் சொல்ல முடியும். வருஷத்துக்கு ஒரு முறை கூட்டம் போட்டு, 'திருந்துங்கள்’ என்று எச்சரிப்பதால் மட்டும் பயனில்லை! இதுபோன்ற மிரட்டல் பப்ளிசிட்டிகள் மட்டுமே நேர்மை யின் அடையாளம் ஆகிவிடவும் முடியாது!

கிருபா, குளச்சல்.

கழுகார் பதில்கள்!

  ஊழலை ஒழிக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று அண்ணா ஹஜாரேவும், ராம்தேவும் ஒரே குரலில் சொல்கிறார்களே?

  ஸ்பெக்ட்ரம் உதாரணம் ஒன்று போதாதா இது உண்மைதான் என்று சொல்ல!

ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி சைனியின் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தாலும் உச்ச நீதிமன்றம்தான் நேரடியாகக் கண்காணிக்கிறது. 'ஸ்பெக்ட்ரம் போன்ற இயற்கை வளங்களை ஏலத்தில்தான் விட வேண்டும். எனவே, உரிமம் பெற்ற 122 நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு மனு போடாமல் குடியரசுத் தலைவர் பெயரைப் பயன்படுத்தி... விவாதம் செய்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை, நாடாளுமன்றக் கூட்டுக் குழு இப்போது விசாரித்து வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஆஜராகி, 'இன்னும் விசாரித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்பதையே திரும்பத் திரும்ப சொல்லி வருவதைப் பார்த்து கோபப்பட்டு உள்ளார் ஜே.பி.சி-யின் தலைவர் பி.சி. சாக்கோ. நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்குள் '2ஜி' பணால் என்று அறிவிக்கத் துடிக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அதைத்தான் அண்ணாவும் ராம்தேவும் குத்திக் காட்டிச் சொல்கிறார்கள்.

போடி எஸ்.சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்!

  மத்திய அமைச்சரவையில் ஏ.கே.அந்தோணிக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளதில் சரத்பவார் அதிருப்தி அடைந்துள்ளாராமே?

பவார் எவ்வளவு பவராய் இருந்தாலும் காங்கிரஸில் இல்லையே. கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சிக்காரர்தானே? எப்படித் தருவார்கள் இரண்டாவது இடம்? அதுவும் சோனியாவை எதிர்த்த சங்மாவை தன் கட்சியில் வைத்திருந்தவர்.. எப்படி மறப்பார் சோனியா?

ரேவதிப்ரியன், ஈரோடு.

கழுகார் பதில்கள்!

  புதிய வேலைகளுக்காக அரசு நிறைய அறிவிப்புகள் செய்து வருகிறதே. இவை முறைப்படி நிரப்பப்படுமா?

  முறைப்படி நிரப்ப வேண்டும். 'முறைப்படிதான் நிரப்பப்படும். யாரும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்று முதல்வர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! ஜெ. இமேஜ் இதனால் கூடும்!

கழுகார் பதில்கள்!