Published:Updated:

மோடி பேசிய 11வது நாள்... - வருமான வரித்துறையில் தொடங்கிய களையெடுப்பு?

மலையரசு

கடந்த ஜூன் மாதமே ஊழல் புகாரில் பெயர் அடிபட்ட 27 ஐ.ஆர்.எஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் களையெடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

Modi
Modi

``வருமான வரித் துறை நிர்வாகத்தில் உள்ள சில கறுப்பு ஆடுகள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். முறையாக வரி செலுத்தியவர்கள் மீது தங்கள் சுயநலத்துக்காக வேண்டுமென்றே நடவடிக்கை, சிறிய தவறு செய்தவர்களை மிரட்டல் விடுத்தது. அதிகப்படியான ஊழல் என இவர்கள் குற்றம் செய்துள்ளனர். இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கட்டாய ஓய்வில் அனுப்பினோம். எனது தலைமையிலான இந்த அரசு, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை சும்மா விடாது.”

Modi
Modi

இப்படி சுதந்தர தின உரையிலும், எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியிலும் குறிப்பிட்டவர் பிரதமர் மோடி. அவர் இப்படிப் பேசி சரியாக 11 நாள்கூட முழுமையாகவில்லை. அதற்குள் வருமான வரித் துறையில் களையெடுப்பு தொடங்கியுள்ளது. ஆம்.. வருமான வரித் துறையைச் சேர்ந்த 22 உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதமே ஊழல் புகாரில் பெயர் அடிப்பட்ட 27 ஐ.ஆர்.எஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் களையெடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

`கணக்கில் வராத ரூ.362 கோடி; முடக்கப்பட்ட பங்குகள்' - சித்தார்த்தா முடிவுக்கு வருமானவரித்துறை காரணமா?

ஓய்வு அளிக்கப்பட்ட இந்த 22 அதிகாரிகளும் ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட என்டிடிவி நிறுவனம், ``டெல்லி, மும்பை, கொல்கத்தா, மீரட், சென்னை உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இந்த 22 பேர். இவர்களில் சிலர் ஆயிரங்களிலிருந்து லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓர் அதிகாரி மீது துபாயிலிருந்து டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒருவர் கொண்டுவந்த 1,224 கிராம் தங்கத்தில் 58 கிராமை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

income tax
income tax
முடக்கப்பட்ட ரூ.746 கோடி சொத்துகள்! - 8 ஆண்டுகளுக்குப் பின் ஜெகன்மோகனை மகிழவைத்த தீர்ப்பு

மேலும், 1989 பேட்சைச் சேர்ந்த ஓர் அதிகாரிமீது விபசாரம் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் சக பெண் அதிகாரிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த அதிகாரிகள் மீதும், இதற்கு முன்பு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட அதிகாரிகள் மீதும் எழுந்துள்ளன. இதில் சில பெண் அதிகாரிகளும் அடங்குவர்" என்கிறது அந்தச் செய்தித் தொகுப்பு. எனினும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

news credit - NDTV