Published:Updated:

S/O அரசியல் தலைவர்கள்!

க.ராஜுவ்காந்தி

S/O அரசியல் தலைவர்கள்!

க.ராஜுவ்காந்தி

Published:Updated:

உள்ளூர் கவுன்சிலர்களே தங்கள் வாரிசுகளை  அரசியலுக்குள் களம் இறக்கிக் கபடி ஆடும்போது, ஆச்சர்யமாக மாநில 'புகழ்; கொண்ட சில அரசியல் பிரபலங்களின் வாரிசுகள் அரசியலுக்கு அந்நியமாகவே இருக்கிறார்கள்... அவர்களின் அறிமுகம்...

 கதிர் ஆனந்த் s/o துரைமுருகன்

S/O அரசியல் தலைவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருணாநிதியையே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைப்பார் பேச்சாளர்  துரைமுருகன். அவர் மகனிடம் இருந்து வார்த்தைகளை வாங்கவே போராட வேண்டி இருக்கிறது. ''எங்க கல்லூரி நிர்வாகம், மினரல் வாட்டர் வியாபாரம் எல்லாத்தையும் நான் பார்த்துட்டு இருக்கேன். நாட்ல என்ன பரபரப்பு இருந் தாலும், வீட்ல அப்பா கலகலப்பா இருப்பார். ராத்திரி 12 மணிக்கு வந்தாலும் எல்லாரையும் ஒண்ணா உட்காரவெச்சு அன்னைக்கு நடந்த எல்லா விஷயங் களையும் ஷேர் பண்ணிப்பார். தலைவர் உட்பட எல்லார் குரல்லயும் மிமிக்ரி பண்ணிக் காட்டுவார். கொஞ்சம் டல்லா ஃபீல் பண்ணா, அப்பாகூடப் பேசினாலே போதும்... ஃப்ரெஷ் ஆகிடலாம்!''

ஜவஹர் s/o தா.பாண்டியன்

S/O அரசியல் தலைவர்கள்!

த்தம் இல்லாமல் திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் மேலாண்மைத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் ஜவஹர். ''அப்பா சொல்லிக்கொடுத்த ஒரே விஷயம்... அவரோட நிழல்ல நான் நிக்கக் கூடாதுங்கிறதுதான். நாங்க கிறிஸ்துவக் குடும்பம். கல்லூரிப் படிப்பை முடிச்ச என் பொண்ணும் பையனும் அப்பாகூட சென்னையில்தான் தங்கி வேலை பார்க்கிறாங்க. வாராவாரம் சென்னைக்கு வந்து அவங்களைப் பார்த்துட்டுப் போயிடுவேன். அரசியல் அரங்கில் அவரை மத்தவங்க விமர்சிக்கிறதைவிட, வீட்ல நாங்க அவரை அதிகமா விமர்சிப்போம். எல்லாத்துக்கும் பொறுமையா விளக்கம் அளிப்பார். என் ரோல் மாடல் அப்பாதான். அவர் தகுதிகள்ல பாதியையாவது வளர்த்துக்க முயற்சி பண்றேன். அப்படி ஓரளவுக்கு அவர் தகுதிகள் எனக்கு வந்திருச்சுனு எனக்கே ஓரளவு நம்பிக்கை வந்தா, நிச்சயமா நானும் அரசியலுக்கு வருவேன்.''

சஞ்சய் சம்பத்   s/o ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

S/O அரசியல் தலைவர்கள்!

ரோட்டில் நிலக்கரி மற்றும் சர்க்கரை வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார் சஞ்சய். இவரது மூன்று வயது மகன் கருண் இளங்கோதான் இளங் கோவனின் செல்லம். ''தமிழ்நாட்ல பி.காம். முடிச் சுட்டு, லண்டன்ல எம்.பி.ஏ. படிச்சேன். அப்பா வெளியில் எப்படியோ... வீட்டிலும் அப்படித்தான். எதையுமே ஓப்பனா பேசுவார். ரொம்பக் கோபப் படுவார். நான் எந்த ஃபீல்டில் இருந்தாலும், அப்பாவோட 'மிஸ்டர் க்ளீன்’ இமேஜுக்கு என்னால எந்தப் பாதிப்பும் வந்துரக் கூடாதுனு கல்லூரி படிக்கும்போதே முடிவெடுத்துட்டேன். அப்பாகிட்ட நான் கத்துக்கிட்டதுல முக்கியமானது, எதையுமே நேரடியா பேசணும்கிறது. நேர்மையா, உண்மையா இருந்தா எதையும் சாதிக்கலாம்னு அப்பாசொல்லிக் கொடுத்திருக்கார். ஆனா, அந்தத் தகுதியை மட்டும் வெச்சுக்கிட்டு அரசியலுக்கு வர முடியாதே. அதனால அரசியலைப் பொறுத்தவரை ஓட்டு போடுறது மட்டுமே என்னோட அதிகபட்சப் பங்களிப்பு.''

சரத் பாஸ்கர் s/o நாஞ்சில் சம்பத்

S/O அரசியல் தலைவர்கள்!

ப்ளஸ் டூ மாணவர்தான். ஆனால், இப்போதே அப்பாவைப் போலவே பேச்சில் வெளுத்து வாங்குவாராம் சரத். கன்னியாகுமாரி மாவட்ட மணக்காவிளையில் வீடு. ''எனக்கு ஐ.ஏ.எஸ். ஆகணும்னு ஆசை. ஆனா, அப்பா - அம்மாவுக்கு நான் டாக்டர் ஆகணும்னு ஆசை. வீட்ல அப்பா 'எம்டன் மகன்’ நாசர் மாதிரி. எப்போ, எப்படி இருப்பார்னு புரிஞ்சுக்கவே முடியாது. மாசத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்கு வருவார். மூணு நாள் இருப்பார். அப்பவும் வீடு பூரா கட்சிக்காரங்களா இருப்பாங்க. எனக்கு சென்னையைப் பார்க்க ணும்னு ஆசை. ஒரு நாள் முழுக்க சென்னையைச் சுத்திக் காட்டுங்கனு அப்பாகிட்ட கேட்கணும். ஆனா, பயமா இருக்கு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism