Published:Updated:

தலையங்கம் - சுய ஒழுக்க விதி!

தலையங்கம் - சுய ஒழுக்க விதி!

தலையங்கம் - சுய ஒழுக்க விதி!

தலையங்கம் - சுய ஒழுக்க விதி!

Published:Updated:
தலையங்கம் - சுய ஒழுக்க விதி!
தலையங்கம் - சுய ஒழுக்க விதி!

காவல் நிற்க வேண்டியவர்களே வேட்டை ஆடித் தீர்ப்பதும்... கண்ணியமான பொறுப்பில் உள்ளவர்களைக்கூட கிள்ளுக்கீரையாகக் கேவலப்படுத்துவதும்... வெறியைத் தீர்த்துக்கொள்வதை மட்டுமே குறியாக இருப்பதுமாக... மனித மனங்களும் குற்றங்களின் தன்மையும் பன்மடங்கு பயங்கரம் கொண்டதாக மாறிவருவதைப் பார்க்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊட்டி கன்டோன்மென்ட்டில்... ராணுவ மேஜர் பதவியில் இருக்கும் தம்பதியின் சின்னஞ்சிறு மகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு ராணுவ ஆர்டர்லி, அந்த அப்பாவி மலர் துடிக்கத் துடிக்கக் கசக்கி நுகர்ந்து இருக்கிறான்.

சென்னை ஆலந்தூரில்... குடும்பத் தகராறுபற்றி விசாரிப்பதற்காக அலைபேசியில் அழைத்த பெண் காவல் ஆய்வாளரின் கட்டளைக்குக் காது கொடுக்காத ஓர் ஆசாமி, அந்தப் பெண் அதிகாரிக்கே ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பித் தன் வக்கிரத்துக்கு வடிகால் தேடி இருக்கிறான்.

பொன்னேரி அருகேயுள்ள கிராமத்தில்... அமைதி, நிம்மதி, ஒற்றுமை வளர்க்கும் வேண்டுதலுடன், கோயில் திருவிழாவை நடத்துவதற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் புகுந்து, நூற்றுக்கணக்கான மனிதர்களின் கண்ணெதிரில் இரண்டு பேரைக் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்று, தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இருக்கிறது ஒரு கும்பல்.

குற்றங்கள் எந்தவொரு சமூகத்துக்கும் புதியவை அல்ல. ஆனால், அண்மைக் காலக் குற்றங்கள் பலவற்றைப் பார்த்தால், குற்றம் இழைப்பது குறித்த அச்சமும் குறுகுறுப்பும் எல்லோரிடமிருந்தும் அற்றுப்போய்க் கொண்டு இருக்கிறதோ என்ற கவலை மேலிடுகிறது.

ஓங்கிப் பரந்த பிரபஞ்சவெளி தொடங்கி, ஒற்றை அணுவின் இயக்கம் வரை ஒரு சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் மாறாமல் இயங்குவதே இயற்கையின் விதி. அந்தச் சுய ஒழுக்க விதிக்கே அப்பாற்படும் ஜீவராசிகளை 'மனிதர்கள்’ என்று எப்படிச் சொல்வது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism