Published:Updated:

ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஆதரவு: ராகுல் காந்தி

Vikatan Correspondent
ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஆதரவு: ராகுல் காந்தி
ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஆதரவு: ராகுல் காந்தி
ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஆதரவு: ராகுல் காந்தி

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 32 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் ஆட்சி அமைப்பதி்ல் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சியமைக்க பா.ஜ.க., ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் முன்வரவில்லை. இதனால், புதிய அரசு அமைவதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் புதிய அரசு அமைவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில ஆளுநர் நஜீப் ஜங்கை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பா.ஜ.க.  முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ வர்த்தனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்பேரில், கவர்னர் மாளிகையில் கவர்னர் நஜீப் ஜங்கை ஹர்ஷ வர்த்தன் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, தங்களுக்கு போதிய இடங்கள் கிடைக்காததால், ஆட்சி அமைக்காமல், எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புவதாக தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மறுதேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல’ என்றார்.

##~~##
இந்நிலையில், வெற்றி பெற்ற 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது, திடீர் திருப்பமாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களிடம், அவர்களது வெற்றிக்கான காரணம் பற்றியும், கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றியும் ராகுல் காந்தி கேட்டார். இதுபற்றி அறிக்கை அளிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஜெய் கிஷன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த அரசை வெளியில் இருந்து ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.