Published:Updated:

ஆம் ஆத்மி போல் பா.ம.க. வெற்றி பெறுமாம்: சொல்கிறார் அன்புமணி

Vikatan Correspondent
ஆம் ஆத்மி போல் பா.ம.க. வெற்றி பெறுமாம்: சொல்கிறார் அன்புமணி
ஆம் ஆத்மி போல் பா.ம.க. வெற்றி பெறுமாம்: சொல்கிறார் அன்புமணி
ஆம் ஆத்மி போல் பா.ம.க. வெற்றி பெறுமாம்: சொல்கிறார் அன்புமணி

சென்னை: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைப் போல் தமிழகத்தில் பா.ம.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணி உருவாகி உள்ளது. அதோடுதான் கூட்டணி வைப்போம்.

டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. தற்போது அங்கு ஒரு மாற்றம் தேவை என மக்கள் நினைத்து ஆம்ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

##~~##
47 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைப் போல தமிழகத்தில் பா.ம.க. தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க முடிவு செய்து உள்ளனர். இதனால் எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்" என்றார்.