Published:Updated:

காவல்துறை கட்டுப்பாட்டில் கைதிகள் மரணம் நீதிக்கு எதிரானது: ஜெயலலிதா

Vikatan Correspondent
காவல்துறை கட்டுப்பாட்டில் கைதிகள் மரணம் நீதிக்கு எதிரானது: ஜெயலலிதா
காவல்துறை கட்டுப்பாட்டில் கைதிகள் மரணம் நீதிக்கு எதிரானது: ஜெயலலிதா

சென்னை: "காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகள் மரணம் அடைவது நீதிக்கு எதிரானது" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

காவல்துறை கட்டுப்பாட்டில் கைதிகள் மரணம் நீதிக்கு எதிரானது: ஜெயலலிதா

சென்னையில் இன்று நடந்த காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு அவர் பேசினார். 

காவல்துறையின் கட்டுப்பாட்டில் ஒருசிலர் உயிரிழப்பது புள்ளி விவர அடிப்படையில் பெரிதாக தெரியவில்லை என்று கூறிய ஜெயலலிதா, மரணமடைந்த கைதியின் குடும்பத்தினருக்கு பேரிழப்பு என்றார்.

பாதுகாப்பு, விதிகளை வகுப்பது, மக்களுக்கு நல்ல நண்பராக இருப்பது ஆகிய கடமைகள் காவல்துறைக்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.

தற்போது புதிய வடிவங்களில் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று கூறிய ஜெயலலிதா, குற்றங்களில் ஈடுபடுவோரின் ஜாமீன் மனுக்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணை விரைந்து முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

##~~##
குற்றவாளிகளிடம் இருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் காவல்துறையினர் உள்ளனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.