Published:Updated:

எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!

Vikatan Correspondent
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: தெலங்கானா, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை குறித்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

##~~##
மாநிலங்களவை இன்று காலை தொடங்கியது முதல் தெலங்கானா, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

முதலில் 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 12 மணிக்கு அவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அவை கூடியபோதும் அதே நிலைமையே நீடித்தது. இதையடுத்து பிற்பகல் 3.30 வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்னைகளை முன்வைத்து மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் வருகின்ற திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.