Published:Updated:

'காங். மீண்டும் ஆட்சியமைத்தால் மீனவர்கள் கடலில் கால் வைக்கமுடியாது!'

Vikatan Correspondent
'காங். மீண்டும் ஆட்சியமைத்தால் மீனவர்கள் கடலில் கால் வைக்கமுடியாது!'
'காங். மீண்டும் ஆட்சியமைத்தால் மீனவர்கள் கடலில் கால் வைக்கமுடியாது!'
'காங். மீண்டும் ஆட்சியமைத்தால் மீனவர்கள் கடலில் கால் வைக்கமுடியாது!'

நாகர்கோவில்: மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தமிழக மீனவர்கள் கடலில் கால் வைக்க முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, ''இன்னும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கடலில் மீனவர்கள் கால் வைக்க முடியாது. தென் தமிழக மக்கள் ஆபத்தில் உள்ளனர். காங்கிரசுடன் சேரும் எந்த கட்சியும் அழிந்து போகும்.

பண்ருட்டி ராமச்சந்திரன் மூத்த அரசியல்வாதி. அவர் ஒதுங்கி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் பணி நாட்டுக்கு தேவை. தொடர்ந்து அவர் ஏதாவது ஒரு கட்சியில் பணியாற்ற வேண்டும். பா.ஜ.க. யாரையும் பலவீனப்படுத்தி தங்கள் பக்கம் இழுக்காது.

தமிழகத்தில் மதுபானக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ‘தாலி காக்கும் தாமரை மாநாடு’ தமிழகம் முழுவதும் நடத்தப்பட இருக்கிறது. முதல் மாநாடு குமரி மாவட்டம் தக்கலையில் வருகின்ற 22 ஆம் தேதி மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேஷ்வரி தலைமையில் நடக்கிறது.

##~~##
சோனியாகாந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய ஓட்டுக்கள் மாற்றுக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை பிடித்திருந்தாலும் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. டெல்லி தேர்தலை மட்டும் அடிப்படையாக வைத்து எதையும் எடை போடக்கூடாது" என்று கூறினார்.