Published:Updated:

காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம்: ஜெ. அறிவிப்பு!

Vikatan Correspondent
காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம்:  ஜெ. அறிவிப்பு!
காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம்: ஜெ. அறிவிப்பு!
காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம்:  ஜெ. அறிவிப்பு!

சென்னை: காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்படும் என்று சென்னையில் நடந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டில் நிறைவுரையாற்றி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.

சென்னையில் 3 நாட்கள் நடந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, காவல் துறைக்கு முழு சுதந்திரம் தரப்பட்டதால் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது என்றார். மேலும், 40 வயது முடிந்த காவலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச உடல் பரிசோதனை செய்யப்ப்படும். பிற மாநகரங்களில் காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்படும்.

சேலம் தலைவாசல், பனமரத்துப்பட்டியில் விதை கிடங்குகள். வாழப்பாடியில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். திருச்சி-கரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க பரிசீலனை செய்யப்படும்.

##~~##
அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயிரிழப்புக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தால் 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும். திருவண்ணாமலைக்கு புதிய மத்தியப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார்.
மேலும் இந்த மாநாட்டின் முடிவில் இந்த அறிவிப்புக்கள் உட்பட 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.