Published:Updated:

முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங். பா.ஜ.க.வில் இணைந்தார்!

Vikatan Correspondent
முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங். பா.ஜ.க.வில் இணைந்தார்!
முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங். பா.ஜ.க.வில் இணைந்தார்!
முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங். பா.ஜ.க.வில் இணைந்தார்!

புதுடெல்லி: முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், இந்திய ஆட்சிப் பணிக்கு 1975 ஆம் வருட பேட்ச்சில் பீகாரில் இருந்து தேர்வானவர். இவர் கடந்த 2011 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து உள்துறைச் செயலராகப் பணியாற்றி 2013 ஜூன் 30 பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

##~~##
அயோத்திக்கு 1990 ஆம் ஆண்டு அத்வானி ரத யாத்திரை சென்றபோது பீகாரில் கைது செய்யப்ட்டார்.  அத்வானி கைது செய்யப்பட்டதற்கு ஆர்.கே. சிங் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முறைப்படி பா.ஜ.க.வில் தன்னை இன்று இணைத்துக் கொண்டுள்ளார். வரவிருகின்ற தேர்தலில் அவருக்கு, பா.ஜ.க. சார்பில் பீகாரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.