Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

அல்லிராஜ், கோவை-15.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருப்பது பற்றி?

##~##

  வரவேற்கத்தக்க முடிவு! குடும்பத்தால், சமூகத்தால் 'தீண்டத் தகாதவர்’ எனத் தள்ளி வைக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படும் திருநங் கையர் மனதில் நம்பிக்கை துளிர்க்க இந்தத் திட்டம் பயன்படும். அனாதைகளாக ஆக்கப்படுபவர்களை ஒருங்கிணைத்து, யார் தயவையும் எதிர்பார்த்து வாழும் சூழ்நிலை இல்லாத வாழ்க்கையை அமைத்துத்தரவும் முதல்வர் யோசிக்க வேண்டும். உடல்ரீதியான மாறுதல், மனரீதியான காயமாக மாறாமல் இது தடுக்கும்.

 சங்கமித்ரா நாகராஜன், கோயம்புத்தூர்-6.

கழுகார் பதில்கள்

  அண்ணா ஹஜாரேவுக்கும் ஐரோம் ஷர்மிளாவுக்கும் என்ன வித்தியாசம்?

  ஒப்பிட்டுக் கேள்வி கேட்பதே தவறு. மீடியாக்களின் வெளிச்சத்தில் பிரபலங்களின் ஆதரவில் பிரதான எதிர்க் கட்சிகளின் பின்னணியில் நடத்தப்பட்டது அண்ணா ஹஜாரேவின் உண்ணாவிரதம். ஆனால் ஐரோம் ஷர்மிளாவுக்கு அவருடைய உடல் மட்டும்தான் ஒரே ஆயுதம். அவருக்கு யாருடைய ஆதரவும் இல்லை. பல மீடியாக்கள் அவரைக் கண்டுகொள்வதே இல்லை. அப்படியே செய்தி வெளியிட்டாலும் அவருடைய கோரிக்கையான, 'ராணுவச் சட்டத்தை நீக்கு’ என்பதைச் சொல்வதும் இல்லை. அண்ணா ஹஜாரேவின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் வெறுமனே பப்ளிசிட்டி பந்தாவாகத் தெரிகிறது. ஐரோம் ஷர்மிளா தனியாக உண்ணாவிரதம் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான போராட்டம் அது.

 இ.சிகாமணி, அத்தனூர்.

கழுகார் பதில்கள்

இந்தியப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியை நினைக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

மிக உயரமானவர் நேரு. அவருக்கு அடுத்து பிரதமராக வந்த சாஸ்திரி ரொம்பவே குள்ளம். சாஸ்திரிதான் பிரதமராக வேண்டும் என்று எல்லோரிடமும் காமராஜர் சொல்லிக்கொண்டு இருந்தபோது, இந்திராவைச் சந்தித்து 'நீங்கள்தான் பிரதமராக இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்தி வந்தவர் சாஸ்திரி. ஆனால் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேரும், மாநில முதலமைச்சர்கள் அனை வரும் சாஸ்திரி பெயரையே முன்மொழிந்தார்கள். எனவே அவருக்கு வேறு வழி இல்லை.

கழுகார் பதில்கள்

பலவீனமான தலைமை இந்தியா வில் அமைந்துவிட்டது என்று நினைத்து பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், போர் பிரகடனம் செய்தார். ஆனால், துரிதமான முடிவை எடுத்து மும்முனைத் தாக்குதலுக்கு சாஸ்திரி உத்தரவு போட்டார். சீனாவும் நம்முடைய நாட்டை மிரட்டியது. அப்போது ரஷ்யா மூலமாக அதற்குப் பதில் சொல்லவைத்தார் சாஸ்திரி. போர் நடந்து கொண்டு இருக்கும்போதே, ரஷ்யாவின் ஏற்பாட்டில் தாஷ்கண்ட் நகரில் பேச்சுவார்த்தைக்கு வரவும் சாஸ்திரி ஒப்புக்கொண்டார். அயூப்கானுக்கும் வேறு வழி இல்லை. 'இனி பேச்சுவார்த்தைகள் மூலமாகவே பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற ஒப்பந்தம் அப்போது கையெழுத்தானது. அதுதான் இன்றுவரை பேசப்படும் 'தாஷ்கண்ட் பிரகடனம்’. இது கையெழுத்தான சில மணி நேரத்தில் சாஸ்திரி இறந்து போனார். அவரது உடல் தாங்கிய சவப்பெட்டியை அயூப்கான் தனது தோளில் தாங்கி வந்த காட்சியும் அரங்கேறியது.

அப்பாவியாகப் பதவி ஏற்றார். அதிரடி மனி தராக விடை பெற்றார்.

 அ.கணேசன், பாளையங்கோட்டை.

கழுகார் பதில்கள்

  மதுவிலக்கு அமலானால் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெயலலிதாதான் என்கிறேன் நான்!

ஜெயலலிதா மனதில் இப்படி ஒரு யோசனை அரும்பி இருப்பதாகக் கிடைத்த தகவலைத்தான் சொன்னேன். அதன் அரசியல் விளைவுகளை நீர் சொல்கிறீர். அப்படி ஒரு முடிவு எடுப்பது சமூகத்துக்குச் செய்யும் நிரந்தரமான சேவை. எல்லா ஆட்சிகளும் ஐந்து ஆண்டுகளில் முடிந்து விடும். ஆனால் சில முடிவுகள் மட்டும்தான் காலங்கள் கடந்தும் பேசப்படும். அப்படிப்பட்ட முடிவாக அது அமையும்.

 எஸ்.ராமசாமி, குட்டைதயிர் பாளையம்.

கழுகார் பதில்கள்

  அகிலேஷ் யாதவின் ஆட்சி திருப்தி அளிக்கவில்லை என்று அவரது தந்தை முலாயம் சிங் கூறியிருப்பது பற்றி..?

இது ஆரோக்கியமான விஷயம்!

சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில்தான் முலாயம் இப்படி பகிரங்கமாகச் சொன்னார். 'மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்சிக்கு வந்துள்ளோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு எந்தக் காரியமும் நடக்கவில்லை. இப்படியே போனால், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற முடியாது’ என்று சொல்லி இருக்கிறார். இதனை அகிலேஷ் யாதவும் ஒப்புக்கொண்டதுதான் நல்ல விஷயம். 'அப்பா, இப்படித்தான் குறை சொல்வார்’ என்று ஒதுக்காமல் அதை ஆரோக்கியமான விமர்சனமாக அகிலேஷ் எடுத்துக்கொண்டார்.

 கே.எஸ். சம்பத்குமார், பெங்களூரு.

கழுகார் பதில்கள்

  'உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தட்டும்’ என்கிறாரே பழ.நெடுமாறன்?

நெடுமாறன் சொன்னதற்கு மறுநாள் முரசொலியில் முதல் பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தி. மனோகரா படத்துக்காக எழுதிய வசனத்தை கருணாநிதி வெளியிட்டார். 'மன்னிப்புக் கேட்க வேண்டும், அதுவும் அரை நொடியில்’ என்று புருஷோத்தமன் சொல்ல... 'யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் தெரியுமா’ என்று கேட்டுவிட்டு மனோகரன் சொல்லும் நீண்ட வசனத்தை அப்படியே வெளியிட்டு இருக்கிறார் கருணாநிதி. அவருக்கு எல்லாமே சினிமா கதை, வசனமாகவே தெரிகிறது. எனவே, சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

  இன்றைய நிலையில் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் யாருடைய கைகளில் இருக்கிறது?

எந்த நிலையிலும் அது வாக்காளர்கள் கையில்தான் இருக்கிறது. இருக்க வேண்டும்.

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்

  பழுத்த அரசியல்வாதி எப்படி இருப்பார்?

மார்க்சிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா இருக்கிறார். போய்ப் பாருங்கள்!

 இராயப்பா, எஸ்.குடிக்காடு.

கழுகார் பதில்கள்

  அரசியல்வாதிகளுக்கு பாவங்கள் பற்றி பாடம் நடத்தினால் என்ன?

அது, அவர்களுக்குப் படிக்காமலே தெரியும் பாடம் என்பது உமக்குத் தெரியாதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism