Published:Updated:

வல்லபாய் படேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல: அத்வானி!

Vikatan Correspondent
வல்லபாய் படேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல: அத்வானி!
வல்லபாய் படேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல: அத்வானி!
வல்லபாய் படேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல: அத்வானி!

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் படேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இணையதளத்தில், ''சர்தார் வல்லபாய் படேலை மதவாதி போலவும், ஜவகர்லால் நேருவை மதச்சார்பற்றவர் போலவும் சித்தரிக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

##~~##
சர்தார் படேலை பற்றி நான் நீண்ட காலமாக ஆய்வு செய்த வகையில், அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற நச்சுக் கருத்து மக்களின் மனதில் வேண்டும் என்றே விதைக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக புலப்படுகிறது.

மக்களின் மனதில் விதைக்கப்பட்ட இந்த தவறான கருத்து, நிச்சயமாக நீக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.