பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

மு.தமிழரசு, ஈரோடு.

கழுகார் பதில்கள்

மறைந்த கேப்டன் லட்சுமி பற்றி...?

லட்சியப் பெண்களுக்கான உதாரணம் லட்சுமி!

அந்தக் காலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவர். இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் என்பதால் பல சலுகைகளைக் கொடுத்து அவரை ஆங்கில ராணுவம் வேலைக்கு எடுக்க முயற்சித்தது. இவரோடு படித்த பல எம்.பி.பி.எஸ்-கள் அதை ஏற்றுக்கொண்டு நல்ல சம்பளத்துக்குப் போனார்கள். ஆனால், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் லட்சுமி.

கழுகார் பதில்கள்

'என்னால் உங்களுக்குத் தரக்கூடியது வீர மரணத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை’ என்று நேதாஜி சொன்ன ஒரு வாக்கியம்தான் டாக்டர் லட்சுமியை கேப்டன் லட்சுமி ஆக்கியது. எல்லாக் காலங்களிலும் லட்சுமிகள் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், நேதாஜிகளைத்தான் காண வில்லை!

 மு.இரா.கணேசமூர்த்தி, எட்டையபுரம்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸின் வெற்றி எதைக் காட்டுகிறது?

அரசியல் ரீதியாகப் பலவீனமாக இருந்தாலும் கூட் டணிக் கட்சிகளின் செல்வாக்குடன் காங்கிரஸ் பலமாக இருப்பதையே காட்டுகிறது. சொந்த சகாவான பால்தாக்கரேவைக் கூட தக்கவைக்க முடியாத அளவுக்கு இருக்கும் தன் கட்சியின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது பாரதிய ஜனதா.

 மு.கேசவசுதன், மேட்டுப்பாளை யம்.

கழுகார் பதில்கள்

கிரானைட் கொள்ளையில் முழு உண்மையும் வெளிவருமா?

கடந்த 20 ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வர்கள், டாமின் நிர்வாகப் பொறுப்பை வகித்தவர்கள், இரண்டு கட்சி ஆட்சியிலும் இந்தத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவ ரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.

இந்தக் கொள்ளையை தடங்கல் இல்லாமல் நடத்துவதற்கு கிரானைட் நிறுவனங்கள் செலவழித்த தொகையே மலைப்பை ஏற்படுத்துகிறது. இதில் சில சட்ட, பரிபாலனப் பிரமுகர்களும் மாட்டலாம்!

 எஸ்.சுரேஷ், சென்னை-10.

கழுகார் பதில்கள்

சரத்பவார் சமாதானம் அடைந்து விட்டாரா?

##~##

கடந்த 6-ம் தேதி டெல்லியில் சோனியா அளித்த விருந்தில் சரத்பவார் கலந்து கொள்ளவில்லை. எனவே சமாதானம் ஆகவில்லை எனத் தெரிகிறது. ஆனால், தனது மகள் சுப்ரியாவை அதே விருந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். எனவே 'சும்மா’ நடிக்கிறார் என்றும் புரிகிறது.

 ரிஷி கிருஷ்ணா, நெல்லை.

கழுகார் பதில்கள்

புதிய நிதி அமைச்சரிடம் இருந்து என்ன எதிர்பார்க் கிறீர்கள்?

ப.சிதம்பரம் பழைய நிதி அமைச்சர்தான். அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆபத்தை உணராத அளவுக்கு லாகவமாகப் பேசுவார். 'நிதிச் சுமையைத் தாங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழி இல்லை’ என்று சிலர் சொல்வார்கள். இதோ ப.சி. சொல்கிறார். 'பொருளாதாரச் சீரமைப்பால் ஏற்படும் சுமையை அனைவரும் நியாயமான விகிதத்தில் பங்கெடுத்துக்கொள்ளத்தான் வேண் டும்’. இளமைக் காலத்தில் 'இலக்கியச் சிந்தனை’ நடத்தியவர் அல்லவா?

 வெங்கடபிரகாஷ், சாத்தூர்.

கழுகார் பதில்கள்

அண்ணா ஹஜாரேவால் அரசியல் கட்சி நடத்த முடியுமா?

இதற்கு பால்தாக்கரே பதில் சொல்லிவிட்டார். 'ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் முறைகளில் ஊழல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. தேர்தலின்போது கறுப்புப் பணம் புழங்குவதைத் தடுக்காத வரை ஊழலுக்கு முடிவு என்பது கிடையாது. நம் நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் அரசியலை வழி நடத்திச் செல்கின்றன. பெரிய அளவில் அங்கு பணம் முதலீடு செய்யப்படுகிறது. பணம் இல்லாமல் யாரும் தேர்தலில் நின்றுவிட முடி யாது’ என்கிறார் தாக்கரே. அண்ணா ஹஜாரேவால் என்ன செய்ய முடியும்?

 எஸ்.சண்முகம், மேலூர்.

கழுகார் பதில்கள்

மதுரை ஆதீனம் - நித்தியானந்தா பிரிந்து விடுவார்கள் போலத் தெரிகிறதே?

நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் விலக்கி விடுவார் என்றே நினைக்கிறேன். கொஞ்சமாவது மான, அவமானம் பார்க்கும் மனிதராக மதுரை ஆதீனம் மாறிவருவது தெரிகிறது!

 பாண்டியராஜ், சிவகங்கை.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

'அ.தி.மு.க.வுடன் இனி கூட்டணி இல்லை’ என்கிறாரே விஜயகாந்த்?

விஜயகாந்த் சொல்லி விட்டார். ஜெயலலிதா சொல்லவில்லை.

இரண்டு பேரும் இனி கூட்டணி வைக்கச் சாத்தியம் இல்லை. கூட்டணி என்பதே பரஸ்பர கொடுக்கல், வாங்கல். ஆனால், இருவர் ஈகோவும் அநியாயத்துக்கு எகிறிக்கிடக்கிறது!

 எஸ்.கண்ணன், குமாரபாளையம்.

கழுகார் பதில்கள்

கொலை வழக்கில் தேடப்பட்டு... தலைமறைவாகி... சரண் அடைந்த தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்குமா?

கட்சி முக்கியஸ்தர்கள் பலரையும் ராமச்சந்திரன்தான் 'பலமாக’க் கவனித்து வந்துள்ளாராம். அதனால், ராமச்சந்திரனைக் கைவிட மாட்டார்கள்!

 பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.

கழுகார் பதில்கள்

மு.க.அழகிரியின் கை மதுரையில் இறங்குவதைப் போலத் தெரிகிறதே?

அழகிரிக்கே அப்படித்தான் தெரிகிறதாம். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கரன்ஸி நோக்கம் கொண்டவர்கள் மட்டுமே அவரை நெருங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆட்சி போனதும் அவர்கள் பறந்து விட்டார்கள். இப்போது மதுரை தி.மு.க-வில் இருக்கும் பலரும், கட்சியில் இருக்கத்தான் நினைக்கிறார்களே தவிர, கோஷ் டியில் இருக்க விரும்பவில்லை.

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு