Published:Updated:

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: பதவியேற்ற முதல் நாளில் கெஜ்ரிவால் நடவடிக்கை

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற முதல் நாளிலேயே முக்கிய துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியுள்ளார்.

டெல்லி குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ஸ்ரீ முகர்ஜி டெல்லி போக்குவரத்து கழக தலைமை நீர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய்குமார் குடிநீர்வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்துறை செயலாளர் ஆர்.கே.வர்மா கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை செயலாளர் புனித்கோயல் மின்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

##~~##
டெல்லி நிதித்துறை செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஷீலாதீட்ஷித்தின் செயலாளராக இருந்த எம்.எம்.குட்டி சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9 மூத்த அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் நேர்மையாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.