Published:Updated:

டெல்லி சட்டப்பேரவையில் ஜன. 2ல் நம்பிக்கை வாக்கெடுப்பு!

டெல்லி சட்டப்பேரவையில் ஜன. 2ல் நம்பிக்கை வாக்கெடுப்பு!
டெல்லி சட்டப்பேரவையில் ஜன. 2ல் நம்பிக்கை வாக்கெடுப்பு!
டெல்லி சட்டப்பேரவையில் ஜன. 2ல் நம்பிக்கை வாக்கெடுப்பு!

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் ஜனவரி 2ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. ஆட்சி அமைக்க முன்வராததால், 28 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடப்பட்டது.

8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்ததால், ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

##~~##
இந்த கூட்டத்திற்கு, புதிய ஆட்சியின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 1ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த நாள், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 3ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பதவியேற்ற ஏழு தினங்களுக்குள் அதாவது ஜனவரி 3ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் முதல் நஜீப் ஜங் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.